என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 23

அந்த மிஸ்ஸிங் யு மெசேஜை பார்த்ததும் ப்ரவீனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்ன விஜி, மிஸ்ஸிங் மீ ன்னு மெசேஜ் அனுப்பிருக்கீங்க, படிக்கும்போது சந்தோஷமா இருக்கு, என்னையும் ஒரு ஜீவன் மதிச்சு மிஸ் பண்ணுதே ன்னு" என்று ரிப்ளை கொடுத்தான் பிரவீன்.

"என்ன பண்றீங்க பிரவீன், நைட் ல ஹோட்டல் சாப்பாடு சாப்பிட மாடீங்களே, இப்போ விழுப்புரம் ல யார் வீடு சாப்பாடு?" என்று மெசேஜ் அனுப்பினாள் விஜி.

"அதுவா, முபாரக் அவனோட உட்ப்பி நர்கீச விழுப்புரத்துல டிராப் பண்ண வரான், அவன் எடுத்துட்டு வரேன் னு சொல்லிட்டான்." என்று மெசேஜ் அனுப்பி வைத்தான் பிரவீன்.

அடுத்த மெசேஜ் அனுப்பும் முன் விஜி கால் செய்தாள் ப்ரவீனுக்கு.

"ஹலோ பிரவீன், என்ன பண்றீங்க" என்றாள் விஜி.

"சும்மா தான் உக்காந்துட்டு இருக்கேன், நீங்க??" என்றான் பிரவீன்.

"நானும் சும்மா தான் பாட்டு கேட்டுட்டு இருக்கேன், காயத்ரி வரேன் னு சொல்லிருக்கா, நைட் எங்க வீட்ல தான் தூங்கப்போறா, சோ அவ வரவரைக்கும் வெயிட் பண்றேன்" என்றாள் விஜி.

"ஏன் உங்க வீட்ல தூங்க வராங்க காயத்ரி" என்றான் பிரவீன்.

"அது ஒண்ணும் இல்ல, அவ ஒரு சின்ன ப்ராப்ளேம் ல இருக்கா, ரொம்ப பயப்படறா, அதான் நான் இங்க வா டி னு சொல்லிருக்கேன்....." என்றாள் விஜி.

"ப்ராப்ளேமா, என்னன்னு சொல்லுங்க, ஏதாவது ஹெல்ப்???" என்றான் பிரவீன்.

"இல்ல இல்ல, சின்ன ப்ராப்ளேம் தான், சரி ஆய்டும், ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேக்கறேன்" என்றாள் விஜி.

"சரி சரி, கண்டிப்பா ஏதாவது ஹெல்ப் நா தயங்காம கேளுங்க" என்றான் பிரவீன்.

"கண்டிப்பா, பட் பிரவீன்...நீங்க இன்னிக்கு பார்ட்டி ல நல்லா பாடினீங்க" என்றாள் விஜி.

"அப்டியா...தேங்க்ஸ் விஜி, ரொம்ப நாள் முன்னாடி ஸ்கூல் படிக்கும்போது ஆர்கெஸ்டரா ல பாடுவேன்" என்றான் பிரவீன்.

"ஓ...நீங்க மல்டி டேலண்ட் பிரவீன், உங்கள மாதிரி ஒரு வெர்சடைல் பெர்சனாலிட்டி என்னோட பிரென்ட் னு சொல்லிக்கறதுல ரொம்ப பெருமையா இருக்கு, ஆனா பொறாமையாவும் இருக்கு, உங்க படிப்பு, உங்க பிரெண்ட்ஸ், உங்க பழக்க வழக்கம், உங்க நேர்மை, உங்க வெகுளித்தனம், உங்க யோசிக்கிற தன்மை, உங்கள புடிச்சவங்க மேல காற்றை அளவுக்கு அதிகமான அன்பு, பிரெண்ட்ஷிப் கு குடுக்கற மரியாதை, அது மட்டும் இல்ல, உங்க மெம்மரி, கிரிக்கெட் இன்னும் பாத்ததில்ல, பட் எல்லாரும் சொல்றத வெச்சு பாக்கும்போது உங்களோட கிரிக்கெட் டேலேண்ட், சின்ன வயசுல பக்குவப்பட்ட மனசு....எல்லாமே ரொம்ப புதுசா இருக்கு எனக்கு, நீங்க தான் என்னோட இன்ஸ்பைரேஷன்.என்னோட ரோல் மாடல்," என்றாள் விஜி.

"ஹலோ ஹலோ...சும்மா ஏத்தி விடாதீங்க, அந்த அளவுக்கு எல்லாம் நான் ஒர்த் இல்ல" என்றான் பிரவீன்,

"பாருங்க, என்ன ஒரு தன்னடக்கம், நெறய பேரு ஒரு பொண்ணு போன் பண்ணா மெசேஜ் பண்ணா உடனே ரெண்டு மூணு நாள் ல அப்டி இப்படின்னு மெசேஜ் போட்டு அவ மனச கெடுத்து அவளோட வாழ்க்கையே டிராக் மாற வெச்சுருவாங்க, பசங்க அப்டி தான் னு நெனச்சேன் நான், நீங்க ஜெம் ஆப் தி பேர்சொன் பிரவீன்" என்றாள் விஜி.

"நீங்க இப்டி சொல்றத கேக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு விஜி" என்றான் பிரவீன்.

"நான் நெறையா டைம் சொல்லிட்டேன், நீங்க வாங்க போங்கன்னு மரியாதை எல்லாம் வேணாம், விஜி னு பேர் சொல்லியே கூப்பிடுங்க னு" என்றாள் விஜி.

"சரி விஜி, முயற்சி பண்றேன். சரி உங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது, என்ன ஹாபீஸ், சொல்லுங்களேன் கேப்போம், உங்க டேஸ்டு எப்படின்னு பாப்போம்" என்றான் பிரவீன்.

"எனக்கா....ம்ம்ம்ம், எனக்கு பேபி பிங்க் புடிக்கும், அப்பா அம்மா ரம்யா புடிக்கும், எங்க கசின் சுகுமார் பிடிக்கும், ட்ரைவ்ல்லிங் புடிக்கும், காயத்ரி பிடிக்கும், படிக்கறது பிடிக்கும், டிவி ல சாங்ஸ் பாக்கறது பிடிக்கும். மூவீஸ் ல எனக்கு மத்திமம் சாங்ஸ் பிடிக்கும், ரொம்ப பிடிச்ச பாட்டு, குழந்தையா இருக்கும்போதே கற்பூர பொம்மை ஒன்று பாட்டு புடிக்கும், அடிக்கடி என் அம்மாவை பாட சொல்லி கேப்பேனாம், பாடும்போது தூங்கிடுவேனாம், அந்த பாட்டு தான் ரொம்ப புடிக்கும், அப்புறம் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் சாங், புன்னகை மன்னன் தீம் மியூசிக் எல்லாம் புடிக்கும்,லேட்டஸ்ட்டா மின்னலே, ஆய்த எழுத்து சாங்ஸ் புடிக்கும், கமல் எனக்கு ரொம்ப புடிக்கும், ஆக்ட்ரேஸ் ல ஜோ,ஆல்வேஸ் ஜோ" என்றாள் விஜி.

"நல்ல டேஸ்டு உங்களுக்கு...சாரி சாரி...உனக்கு" என்றான் பிரவீன்.

"குட், கீப் இட் அப், உங்க ஹாபீஸ் சொல்லுங்க, உங்களுக்கு என்ன புடிக்கும் புடிக்காது சொல்லுங்க, உங்க டேஸ்டு எனினும் பாக்கலாம்" என்றாள் விஜி.

"எனக்கு பெரிய ஸ்பெஷல் எல்லாம் இல்ல, கிரிக்கெட், சாங்ஸ், பிரெண்ட்ஸ், அவ்ளோ தான், மூவீஸில ராம், காதல், காதல் கொண்டேன், செவென் ஜீ, புடிக்கும், சாங்ஸ் ல எல்லா சாங்க்ஸும் கேப்பேன், கதை எழுதுவேன், கவிதை எழுதுவேன்" என்றான் பிரவீன்.

"குட் பிரவீன், " என்றாள் விஜி.

"அது சரி, காயத்ரி வந்துட்டாங்களா, ரம்யா என்ன பண்ராங்க, அம்மா என்ன பண்ராங்க, அப்பா எப்போ வராரு" என்றான் பிரவீன்.

"காயத்ரி இன்னும் வரல, ரம்மி டி வீ பாக்கறா, அம்மா தூங்கிட்டாங்க." என்றாள் விஜி.

"என்ன இன்னிக்கு சீக்கிரமா தூங்கிட்டாங்க ஆன்டி" என்றான் பிரவீன்.

"அதுவா, இன்னிக்கு கிருத்திகை விரதம், அதான் சோர்வா இருந்தாங்க, தூங்கிட்டாங்க" என்றாள் விஜி.

"சரி விஜி, முபாரக் வந்துருவான், நான் வெக்கிறேன், நாளைக்கு மேட்ச் பாக்க வாங்க, உங்க ஆன்செர் தெரியும், ட்ரை பண்றேன் பட் நாட் கன்பார்ம் னு பட் அகைன் ஐ ஆம் ரிப்பீட்டிங், ட்ரை பண்ணுங்க" என்றான் பிரவீன்.

"திருப்பி நீங்க வாங்க போங்க....." என்றாள் விஜி.

"அது மாற மாட்டேங்குது.....காலப்போக்குல சேன்ஜ் ஆய்டும் விடுங்க" என்றான் பிரவீன்.

சொல்லிக்கொண்டிருக்கும்போதே காலிங் பெல் அடித்தது.

"காயத்ரி வந்துட்டான்னு நெனைக்கிறேன், ஓகே பிரவீன், குட் நைட், டேக் கேர்" என்றாள் விஜி.

"சரி விஜி, குட் நைட் டு ஆல் ஆப் யு" என்றபடி போனை கட் செய்தான் பிரவீன்.

"வா காயு, ஏன் டி இவ்ளோ லேட்டா வர" என்று கேட்ட விஜி காயத்ரியின் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து "என்ன டி ஆச்சு" என்றாள் விஜி.

"இல்ல டி, அந்த நாய் என் உயிரை எடுக்கறான், பாரு...எப்படி எல்லாம் மெசேஜ் பண்ரான் னு, எனக்கு என்ன பண்றதுன்னே தெரில டி, ரொம்ப பயமா இருக்கு, இப்டியே டெய்லி டெய்லி பயத்துலயே செத்துடுவேன் போல இருக்கு, அப்பா கு தெரிஞ்சா என்மேல இருக்கற நம்பிக்கை எல்லாமே போய்டும், என்ன நெனைப்பாரு, என் அப்பா என்மேல வெச்சிருந்த நம்பிக்கையை நான் இப்டி தப்பு பண்ணி தொலைச்சுருவேனோன்னு பயமா இருக்கு டி, அப்பவே ஸ்டாட்டிங்க்ல நான் அவனுக்கு மெசேஜ் கு ரிப்ளை குடுக்காம இருந்திருந்தா இவ்ளோ தூரம் போயிருக்காது, இப்போ போய் அப்பாகிட்ட சொன்னா, இவ்ளோ நாள் ஏன் டி சொல்லல னு கேப்பாரு, எப்படி டி சொல்ல முடியும், நானே தான் இதெல்லாம் என்கரேஜ் பண்ணிட்டேன் னு, செத்துடலாம் போல இருக்கு டி"என்றபடி விஜியின் மடியில் படுத்து அழுதாள் காயத்ரி.

"காயத்ரி...அழுதா ஒண்ணும் நடக்காது, இப்போ ஆனதை பத்தி பேச வேணாம், ஆகப்போறத பத்தி பேசுவோம், என்னன்னு மெசேஜ் பண்ணிருக்கான், காமி" என்றாள் விஜி.

"இந்தா பாரு டி" என்றபடி மொபைலை நீட்டினாள் காயத்ரி.

"ஹே....காயு, இன்னிக்கு என்ன கோவமா, க்ளாஸ் முடியற வரைக்கும் உம்முன்னு இருந்த" என்று முதல் மெசேஜ்.

"என்ன பேசமாட்டியா....முன்னாடி எல்லாம் நாளா பேசின, நைட் புல்லா மெசேஜ் பண்ணின, இப்போ...புது பாய் பிரென்ட் கெடச்சுட்டானா, யாரு, அந்த கார் ல வந்தானே அவனா" என்று இரண்டாவது மெசேஜ்.

"நீயும் அவன்கிட்ட மயங்கிட்ட போல???நீ மட்டுமா, இல்ல விஜியுமா, ஒரே கல்லுல ரெண்டு மாங்காயா??" என்று மூன்றாவது மெசேஜ்.

"என்ன...நான் மெசேஜ் பண்ணிட்டே இருக்கேன், ரிப்ளை வரவே இல்ல, யாருக்குடா அவ்ளோ பிசியா இருக்க" என்று நான்காவது மெசேஜ்.

"என்ன பெட் ல இருக்கியா, இல்ல இன்னும் பெட் கு வரலியா....ஐ மீன் தனியா தான்...தூங்க போய்ட்டியான்னு கேட்டேன்" என்று ஐந்தாவது மெசேஜ்.

"பாரு விஜி, நான் எதுக்குமே ரிப்ளை பண்ணல, அதுக்கும் எப்படி எல்லாம் பேசறான் பாரு, நாய், இவன் எல்லாம் அக்கா தங்கை கூட பொறக்கல??இவனுக்கு மட்டும் கல்யாணம் ஆகட்டும், அப்போ தெரியும் இந்த பாவத்துக்கான விலை எல்லாம்" என்றாள் காயத்ரி கோவமாக.

"இட்ஸ் ரியலி நாட் குட் காயத்ரி, இதுக்கு ஏதாவது பண்ணியே ஆகணும், போலீஸ் ல கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாமா இல்ல என் அப்பா வரவரைக்கும் வெய்ட் பண்ணலாமா?" என்றாள் விஜி.

"வெய்ட் பண்ணலாம் டி, என்ன ஆனாலும் என் வாழ்க்கை தான் மாட்டிகிட்டு சின்னாபின்னமாக போகுது" என்றாள் காயத்ரி.

"காயத்ரி, என்ன ஆயிருச்சுன்னு நீ இப்டி என்னவோ வாழ்க்கை தொலைக்க மாதிரி பேசிட்டு இருக்க, இது ஜஸ்ட் எ மஸ்கிடோ, விடு, பாத்துக்கலாம்" என்றாள் விஜி.

"இலை விஜி, என் அப்பா கு கஷ்டம் குடுக்காம செத்துடலாமான்னு இருக்கு" அழுதபடியே கூறினாள் காயத்ரி.

"லூசா டி நீ, இந்த சின்ன விஷயத்துக்கே இப்டி ஒடைஞ்சுபோற, பாத்துக்கலாம் டி" என்று ஆறுதல் கொடுத்தாள் விஜி.

"விஜி, எனக்கு நீ தான் டி ஹெல்ப் பண்ணனும், ப்ளீஸ்" என்றாள் காயத்ரி.

"கண்டிப்பா டி, அது இருக்கட்டும், நாளைக்கு என்ன, மேட்ச் பாக்க போலாமா, நான் அம்மாகிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன், ரம்மிக்கும் வாங்கிட்டேன்," என்றாள் விஜி.

"உன்கூட போறேன் னா அப்பா ஓகே சொல்லிடுவாரு டி, பட் மேட்ச் பாக்க வரோம் னு பிரவீன் கிட்ட முபாரக் அண்ணா கிட்ட ரியாஸ் அண்ணா கிட்ட யார் கிட்டயாச்சும் சொன்னியா" என்றாள் காயத்ரி.

"இல்ல, அது சஸ்பென்ஸ்' என்றாள் விஜி.

"விஜி, சொல்றேனே னு தப்ப நினைக்காத, எதுக்கும் நாம பிரவீன் முபாரக் ரியாஸ் எல்லார்கிட்டயும் டிஸ்டன்ஸ் கீப் அப் பண்றது நல்லது, இல்லன்னா, பியூச்சர்ல அவங்களும் செந்தில் மாதிரி பண்ண போறாங்க, அது ல இருந்து மீள்றது கஷ்டம் டி" என்றாள் காயத்ரி.

சற்றே விஜி ஆடிப்போனாள். அனால் அதில் இருக்கும் உண்மை நிலை அவளை யோசிக்க வைத்தது.

"ஆமா காயத்ரி, நீ சொல்றது சரி தான், இந்த கம்மி டேஸ்ல இவ்ளோ க்ளோஸ் ஆயிருக்கோம், சேம் செந்தில் போல தான், ஓகே லெட் மீ திங்க் அபவுட் இட்" என்றாள் விஜி.

"அதுக்காக நாம அவங்கள புல்லா ஒதுக்கிடணும் அவாய்ட் பண்ணணும்னு சொல்லல, பட் ஒரு டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ணணும், பட் பார் ஸ்யூர், அவங்க கண்டிப்பா செந்தில் போல இல்ல, பட் யாருக்கு தெரியும், பியூச்சர்ல என்ன நடக்கும் னு" என்றாள் காயத்ரி.

"யா, ஐ அக்ரீ" என்றாள் விஜி.

"விஜி, ஆனா ரொம்ப அவாய்ட் பண்ணிட வேணாம், நல்ல பிரெண்ட்ஸ் அஸ் ஆப் நவ், அவங்கள கஷ்ட படுத்திட கூடாது, ஏன்னா, இன் கேஸ், அவங்க நெஜம்மாவே ரொம்ப நல்லவங்ன்னு பியூச்சர்ல தெரிஞ்சா அது நமக்கு லைப் லாங் உறுத்தலா இருந்துகிட்டே இருக்கும்" என்றாள் காயத்ரி.

"அதும் சரி தான் காயத்ரி, பட், எனக்கு என்னன்னா பிரவீன் முபாரக் விஜய் ரியாஸ் ரகு வெற்றி கதிர் ஹரி இவங்க எல்லாரையும் பாத்தா அப்டி தப்பான ஆளுங்களா தெரில, பட் கேர்புல்லா இருக்கலாம், ஐ அக்ரீ வித் யு, செந்திலை பாத்ததும் அவன் பார்வையிலேயே எனக்கு புரிஞ்சுது, அவன் சரி இல்லன்னு, பட் இந்த க்ரூப் அப்டி தெரில டி" என்றாள் விஜி.

"எஸ், வேணும்னா இப்போ ஒன்னு பண்ணலாம், ஒரு டெஸ்ட் வெப்போம், நாம பிரவீன் ரியாஸ் விஜய் முபாரக் நாலு பேருக்கும் மெசேஜ் ல விளையாடி பாக்கலாம், என்ன பண்ராங்கன்னு பாப்போம்" என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், பண்ணலாம், பட் அவங்க நம்மள தப்ப நெனச்சுட்டா, நம்மகூட பேசாம விட்டுட்டா" என்றாள் விஜி.

"யோசிச்சு ப்ராபெரா மூவ் பண்ணுவோம்" என்றாள் காயத்ரி,

"சரி, அதுக்கு முன்னாடி நாளைக்கு மேட்ச் பாக்க போறோம் னு அப்பாகிட்ட சொல்லிடு போன் ல" என்றாள் விஜி.

காயத்ரி போனை கையில் எடுத்து தந்தைக்கு போன் செய்தாள்.

பகுதி 23 முடிந்தது.

-----------------தொடரும்--------------------

எழுதியவர் : ஜெயராமன் (8-Sep-17, 11:20 am)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 377

மேலே