புனிதமான பூமி

#புனிதமான_பூமி...

வெறுமையான உலகம் இது..
வேற்றுமை நிறைந்த உலகம் இது...
அடிக்கடி கலகமென்கிறது இது...
தாய் வீடு, தாய் நாடு என்ற பேச்செல்லாம் வீண்...
பணம் ஒன்றே குறிக்கோளென்று ஆகிறது காண்...

மனிதன் விரும்பித் தின்பது ஊன்..
அவன் மனம் ஊனம் ஆனது காண்...

பெண் வயதுக்கு வந்தாலும் போஸ்டர்.
கல்யாணமென்றாலும் போஸ்டர்.
அட!
செத்தாலும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்...
உலகம் இப்படி ஆகிப் போயிடுச்சே மாஸ்டர்...

அறிவில் கரையான் பிடித்து கட்டிவிட்டது புற்று...
அது வளர, எங்கும் பரவுகிறது ஆடம்பரப் பிதற்று...
மீண்டு வர உன் அறிவைக் கொஞ்சம் அதற்று...

புனிதமான பூமி இது...
உற்பத்தியும், அழிவும் மறுசுழற்சியாய் கொண்ட சாமி இது...
இதை உணரார் பூரணத்துவம் அடையார்...

பாதுகாக்க ஒன்றே உண்டு...
அது இயற்கை தானென்று பாடு சிந்து...
புதுபுது ராகங்கள் ஓராயிரமாய் திரட்டி வந்து மீண்டும் மீண்டும் உனது அறிவுக்கதவை தட்டுவேன் நான் நின்று...
இதற்காகவே நிகழ்ந்தது எனது பிறவியென்று...
நீயும் உணர்ந்தால் விளைந்திடும் நன்று...

புனிதமே மீள்வாய்...
புனித பூமியே மீள்வாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (8-Sep-17, 8:50 am)
Tanglish : punithamana poomi
பார்வை : 2936

மேலே