ஆளுக்கொரு நீதி

பொன்குடங்கள்
பூஜையிலிருக்கின்றன
வேண்டாமென்றுதானே
உடைக்கப் பட்டது
மண்குடம்

கேக்குகள் பரிமாறப்படுகின்றன
மேஜையில்
பழைய சாதம்
நுரைத்துக் கிடக்கின்றது
அடுக்களையில்

மீன்கள் சங்கீதம் பாடுகின்றன
நீருக்குள்
கொக்கின் குரல்
கர்ண கடூரம்

நீதிகள் இடத்தைப் பொறுத்தது

உடைப்பதும் உண்பதும்
அப்புறம் இருக்கட்டும்
நிறைப்பதற்கும் பிழைப்பதற்கும்
தண்ணீர வேண்டாமா
மேகமே !

--மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (8-Sep-17, 9:41 am)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 144

மேலே