உன்னை என்ன சொல்ல

நிலவு அழகென சொன்னால்
உன் முகத்தை என்ன சொல்ல
மலர்கள் அழகென சொன்னால்
உன் வண்ணத்தை என்ன சொல்ல
அருவிகள் அழகென சொன்னால்
உன் சிரிபொலி என்ன சொல்ல
கார்மேகம் அழகென சொன்னால்
உன் கூந்தலை என்ன சொல்ல
மீன்கள் அழகென சொன்னால்
உன் கண்களை என்ன சொல்ல
மாங்கனி அழகென சொன்னால்
உன் கன்னத்தை என்ன சொல்ல
கோவை பழத்தை அழகென சொன்னால்
உன் உதட்டை என்ன சொல்ல
வலம்புரி சங்கினை அழகென சொன்னால்
உன் கழுத்தினை என்ன சொல்ல
இந்த உலகமே அழகென சொன்னால்
என் உலகமே உன்னை என்ன சொல்ல

எழுதியவர் : ருத்ரன் (8-Sep-17, 8:23 pm)
Tanglish : unnai yenna solla
பார்வை : 148

மேலே