ஆண் பெண் ஈர்ப்பு வேறு ஒரு கோணம்

காலையிலே மலர்ந்த மல்லிகைக்கு இருக்கும் மயக்கும் வாசனை உடையவள் தான் திரு
மணத்துக்கு தயாராய் இருக்கும் கன்னிப் பெண்.பெரியவர்கள் நிச்சியம் பண்ணி இருந்தாலும் சரி,
இல்லை இந்த கால வழக்கம் போல காதலிசசு திருமணம் புரிந்து கொண்டாலும் சரி
கணவன் மணைவி ஆக ஆகி நல்ல முறையில் இல்லறம் நடத்தி வருகிறார்கள்.

இவர்களுக்கு காலப் போக்கில் குழந்தைகள் பிறந்து அப்பா அம்மா ஆகி தங்களுக்கு பிறந்து
குழந்தைகளை பேணி வளர்த்து வருகிறார்கள்.குழந்தை பிறந்து உடல் தளர்ந்து விட்டதாலோ
இல்லை உடல் சம்பத்தப் பட்ட கோளாறு வந்தோ என்னவோ குடும்ப தலைவி உடல் மெலிந்து
பார்ப்பவர் மயக்கும் மல்லிகை மலர் போக இருந்த அவள்,சொந்த கணவனுக்கே ஒரு வெறுப்பை
தரும் சூழ் நிலையிலே தள்ளப் பட்டு வாழ்ந்து வருகிறாள்.ஆனால் குடும்ப தலைவன் குழந்தைகள்
பிறந்தும் அவன் உடம்பு இன்னும் இளமையாக இருந்து வருகிறது.வெளி இடங்களில் அவளை
தன் மனைவி என்று சொல்லிக் கொள்ளவே பிடிக்கவில்லை.ஆனால் பிறந்து இருக்கும் குழந்தை
களுக்கு' அவள் தானே அம்மா!!!!!!
சில குடும்பங்களில் குழந்தைகள் பெற்றும் இன்னும் பொலிவோடு இருந்து வந்து வருகிறாள்
குடும்ப தலைவி. ஆனால் குடும்ப தலைவன், உடல் சம்பந்தப் பட்ட கோளாறாலோ இல்லை
உத்தியோகத்திலே அதிக முன்னேற்றம் கிடைக்காததாலோ, இல்லை கடன் தொல்லையாலோ குடும்ப
தலைவன் மெலிந்து எழுப்பும் தோலுமாக இருந்து வருகிறான். தன் சிநேகிதிகள் இடம் தன்
கணவனைப் பற்றி சொல்லிக் கொள்ள வெட்கப் படுகிறாள்.ஆனால் பிறந்து இருக்கும் குழந்தைகளுக்கு
அவர் தானே அப்பா!!
இந்த சூழ் நிலையில் இளமையாக இருந்து வரும் ஆண் தன் அழகை நினைத்து பெருமைப் பட்டுக்
கொண்டு ,"ஆண் பெண் ஈர்ப்பு" இருக்கிறது என்கிற "" போர்வையில்"" தன்னை மறைத்துக் கொண்டு
""சின்ன வீடு "" தேடி அதை அமைத்துக் கொள்ள முனைவது எந்த முறையில் நியாயம் ஆகும். எனக்கு
ரெண்டு மணைவிங்க வச்சுக்க முடியும் என்று சொல்லித் திரிவது நியாயமாகாதே!
அதே போலவே குழந்தைகள் பிறந்தும் இன்னும் இளமை குன்றாமல் இருந்து வரும் தலைவி
" " ஆண் பெண்"" ஈர்ப்பு என்கிற காரணத்தை காட்டி கள்ள காதல் வைத்துக் கொள்வதும் தவறு
இல்லையா!!
நாம ராமர் பொறந்த காலத்தை பார்த்தது இல்லை.அது ஒரு இதிகாச காவியம். அந்த ராமர்
ஒருவனுக்கு இருத்தி என்று வாழ்ந்து காட்டி இருப்பதாக அந்த காவியம் சொல்லுகிறது.நாம் எல்லாம்
தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள்.திருள்ளுவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து வருபவர்கள்.அவரை ஒரு
தெய்வமாக நாம் வழிப் பட்டு வருகிறோம். அவர் வாசுகி அம்மையாருடன் வாழ்ந்து வந்து நமக்கு
பொன்னான பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்ட திருக்குறளை தந்து இருக்கிறாரே. எத்தனை
மணி மணியான பொன்னான கருத்துக்கள் கொண்ட பொக்கிஷம் அது இல்லையாங்க.

மனம் பிடித்து திருமணம் புரிந்து கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்ட பிறகு எந்த ஆணும் சரி,
பெண்ணும் சரி "" ஆண் பெண் ஈர்ப்பு '' என்கிற போலியான காரணத்தை சொல்லிக் கொண்டு அவர்கள்
செய்வது """சரி"" என்று சொல்லிக் கொண்டு காலம் முழுவதும் ஒருவரை மற்றோருவர் ஏமாற்றிக்
கொண்டு வாழாமல் அவர்களுக்கு பிறந்து இருக்கும் குழந்தைகளின் சந்தோஷத்தை முன்னிட்டும்
அவர்கள் எதிர் காலம் நன்றாய் அமைய அவர்கள் தங்கள் ""ஆண் பெண் ஈர்ப்பு"" ஆசையை மூட்டை கட்டி
வைத்து விட்டு நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வர கூடாதாங்க??

எழுதியவர் : ஜெ சங்கரன் (9-Sep-17, 12:30 pm)
சேர்த்தது : Sankaran
பார்வை : 294

மேலே