வானவில்
சிறுவன் தந்தையை நோக்கி
'அப்பா இத்தனை அழகிய
வான வில்லை விண்ணில்
வரைந்தது யாரப்பா' என்று கேட்டான்
தந்தை சொன்னார் ,
'என் செல்ல முத்தே சொல்கிறேன் கேள்
' சூரியன் தன் ஒளி கற்றயாம்
தூரிகைகொண்டு மழைத்துளியாம்
மையில் தோய்த்து வானமாம்
திரைசீலையில் தீட்டிய வண்ண வண்ண
சித்திரம்தான் கண்ணே என் கண்ணம்மா
நீ காணும் வானவில்' என்றார்

