ஆபரணம்
ஆபரணம்
வெற்று கழுத்தாய்
உன்னை காணும் போது
வெட்கி தலை குனிந்தேன்
ஆபரணங்களை உனக்கு
பிடிப்பது இல்லை போலும்
அத்தனைக்கும் விடை கொடுத்து விட்டாய்
ஆசைகள் உனக்கு இல்லையா
என் ஆசை பலிக்கட்டும்
என்னை ஒரு முறை ஏனும் சூடு
பிறவி பலன் கிடைக்கட்டும்
புத்தர் சொல்லியது உனக்கு மட்டும்
எட்டியது ஏனோ !
எனக்கு அடிமைகள் பலர்
உனக்கு நான் அடிமை என்னை வெறுப்பதால்
கவுரவம் உனக்கு இல்லையா
இச்சமுதாயத்தில்
பொன் நகை மிளிர
புன்னைகை மங்குகிறது
பலர்க்கு
உனக்கு மட்டும் எப்படி
கடவுள் கூட எனக்கு அடிமை