தன்னம்பிக்கை

கால்கள் அலைந்து முடங்கியது
கடற்கரை ஓரம்

கடல் அலையாய்
உன்னை காண

அயராமல் நீ செய்யும் முயற்சியில்
மெய்சிலிர்த்து நின்றேன்

எதை தொட உன் முயற்சியோ
என் மனதில் உதித்தது
உன் விதை

விழுவது முடங்கி விட அல்ல
துளிர் விட

பரந்து கிடக்கிறோம் புற்களை போல
சிறுமை ஆனாலும்
பசுமையாக மாற்றும் வல்லமை நமக்கு

ஜன்னலை திற
காற்று வரட்டும்

கதவை திற
வழி பிறக்கும்

எழுந்து நட பாதை தெளிவாகும்

உன்னைக் கூர்ந்து பார்

உன் கைவிரலை விட வழிகாட்டி யாரும் இல்லை

உன் கால்களை விட வேறு யாரும் கடின உழைப்பாளி இல்லை

உன் கண்களை விட சிறந்த தொலைநோக்கு வேறு இல்லை

குதிரைக்கு கடிவாளம் இட்டதை போல உன் புத்தியை கூர்மை ஆக்கு

இலக்கு அமை

ஓடு

வெற்றி சுலபம் அல்ல

அகப்படாததும் அல்ல

எல்லாம் உன் கையில் !!!!!!!!!!!!!

எழுதியவர் : senthilprabhu (11-Sep-17, 10:11 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : thannambikkai
பார்வை : 1408

மேலே