அம்மா

காக்கைக்கு தன் குஞ்சு
பொன் குஞ்சு

உனக்கு நான்
அம்மா !!

பத்து மாதம் சுமந்தாய் அம்மா
என்னை

வலிகள் தாங்கி
விழிகள் மூடாமல் !

மொழிகள் பல
கற்று கொடுத்தாய்
என் மழலை மொழியில் !

உன் பசி
மறந்து
என் பசி போக்கினாய் !

கவலைகள் பல
உன் மனதில்

அதை காட்டவில்லை
என் முகத்தில்

நீ காட்டும்
பாசத்தை கண்டு

மண்ணிற்கும் விதைக்கும் உள்ள
பாசம் தோற்று விட்டது

நீ காட்டும் அன்பிற்கு
உதாரணம்
வேறு எதுவும் இல்லை இவ்வுலகில் !

நீ கோபம் காட்டுவாய்
இடி இடிப்பதைப் போல

பின் முகம் மலர்வாய்
மின்னல் மின்னுவதைப் போல

அவ்வப்போது கண்ணீர் வடிப்பாய்
மழையைப் போல

தேனீக்கள் மலர்களை கொஞ்சுவதை
போல கொஞ்சுவாய்

உபசரிப்பு என்பது
விருந்தினருக்கு மட்டும் அல்ல
எனக்கும் தான் என தினம் புரிய வைத்தாய்

பணம் தன் மதிப்பு இழந்தது
உன் உழைப்பிற்கு
கூலி நிர்ணயம் செய்யும் போது !

எனக்காக சுழன்ற
உன் கைகளும் கால்களும்
ஏனம்மா ஒய்வு எடுத்து கொண்டது

நான் உனக்கு
ஒய்வு கொடுக்காததாலோ !!

நான் என்ன புண்ணியம் செய்தேனோ
உன் வயிற்றில் மகனாக

உன் கண்ணில் ஏக்கம்
காண கண்கள் கூசியது

வார்த்தைகள் வரவில்லை
வாயடைத்து நின்றேன்

தனிமை என்பது
நீ இருக்கும் வரை தெரியவில்லை

கண்ணீர் வழிந்து ஓடியது
உன்னை காண முடியாமல்

என
நான் நினைக்க

கண்ணீரை என்னிடம் இருந்து
உன்னுடன் எடுத்து செல்கிறாயோ !!!

எனக்கு தெரியாமலேயே

தெய்வத்திடம் இதுவரை
வேண்டியது இல்லை

இன்று வேண்டுகிறேன்
உனக்காக

சொர்க்கத்தை
இனி மேலாவது காட்டு !!

எழுதியவர் : senthilprabhu (11-Sep-17, 9:36 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : amma
பார்வை : 354

மேலே