சிந்தனைக்கு
சிந்தனைக்கு...
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்
ஆர்ப்பரிக்கும் கடல்
அலைகள் இல்லாமல்
இருக்கிறதா ?
உழைக்கவும் இயங்கவும்
அலைகளைப் பார்த்து
கற்றுக் கொள் !
சூரிய உதயத்தில்
மலர்கள் மரங்கள்
செடிகள் கொடிகள்
தலை அசைத்து
புத்துணர்வுடன்
வரவேற்பதுபோல்
நாமும் வரவேற்க
கற்றுக கொள்வோம் !
உண்மை நேர்மை
உன்னிடம் இருந்தால்
அமைதி மகிழ்ச்சி
ஆனந்தக் கூத்தாடும்
துயரம் துன்பம்
தொடர யோசிக்கும் !
புகழை விரும்பி
தவறை மறைக்க
நினைத்தால்
சத்தியத்தின் கதவுகள்
சாத்தப்பட்டு விடும் !
அன்பு வழியே
சென்று பார்
சத்தியத்தின் கதவுகள்
தானே திறந்து
உன்னை வரவேற்கும் !
நேர்மையாய் இரு
தோல்வி வந்தாலும்
தாங்கிக் கொள்வாய்
வாழ்வில் வெற்றியின்
முதல்படியாக
அமைந்து விடும் !
சத்தியத்தின் கதவுகள்
திறந்து விட்டால்
அன்பு அடக்கம்
அமைதி மகிழ்ச்சி
அங்கு இருப்பதை
உணர்ந்து கொள்வாய் !
பூ.. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை சென்னை