காதலுக்கொரு வரமா

..........................................................................................................................

தானன தானா தனநனனா
தானன தானா தனநனனா
தானன நனநனனா ............. தானா
தானன நனநனனா... என்ற மெட்டில் பாடவும்.

ஆண்.....ஆயிரம் கோபியர் இருந்து என்ன
.................ஆயிரம் ஆண்டுகள் கடந்து என்ன

..................ராதையைப் போல் வருமா...... வருமா...
.................காதலுக் கொரு வரமா... !

பெண்.....ஆயிரம் யாதவர் இருந்து என்ன
................ஆயிரம் ஆண்டுகள் கடந்து என்ன

................கண்ணனைப் போல் வருமா....... வருமா
................காதலுக் கொரு வரமா... !
1

ஆண்.. மௌனத்தில் பேசும் மலர்வனங்கள்...
............... மயக்கத்தில் தெளியும் இருமனங்கள்..

பெண்.....கன்னத்தில் முகம்கண்டார்......... தம்முகம்
.................அவள்முகம் எனக்கொண்டார்.. (ஆயிரம்)

2
பெண்....எல்லா நாவிலும் நடன மிடும்
...............ஏந்தலின் தோற்றம் செவியறியும்..

ஆண்.... மல்லிகை சூடும்மங்கை....... வாசம்
.................தூரத்தில் விழியறியும்.. (ஆயிரம்)

3
பெண்....குரும்பனை பாளை சிரிப்பிருக்கும்
...............குறும்பனை இதயம் சிறைப்பிடிக்கும்..

ஆண்.... நறும்புகை மண்டபத்தில்....... பெண்வீணை
.................நரம்புகை மீட்ட வரும்..... (ஆயிரம்)

4
ஆண்...... மலர்க்கணை கொண்டு மையெழுதும்
................... மைத்தடங் கண்ணாள் மெய் எழுதும்..!

பெண்....... மெய்யெழுத் தென்ன சொல்லும்.. நீதான்
.....................உயிரெழுத் தென்று சொல்லும்....!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (12-Sep-17, 12:59 pm)
பார்வை : 198

மேலே