vaalkai
இரவின்
நீளம் குறைந்த
நடுநிசி !!
வாகனதழுவல் இல்லா
தார்ச்சாலைகள்!!
உழைத்தயர்ந்து
உறங்கும் தொழிலாளியின்
குறட்டை சப்தம்!!
இமைகளின்
மேன்மை கடிக்கும்
ஞாபக மூட்டை பூச்சி
உழைப்பை தேடிய
உடல் வர்க்கம் கேட்கிறது
விழியே விடியும் முன்னே
உறங்கு!!