கிடை ஓட்டி

இவன்
கரிசல் பூமியின்
கதா நாயகன்!

வறட்சி வாழ்க்கையை
விழுங்கும்
பொழுதுகளில்
வட்டிக்கு தருபவர்கள்கூட
வள்ளல்கள் ஆவதுண்டு!!

அப்பனின் கடனுக்கான
தப்பாமல் பணிசெய்யும்
தலை மகன்!!

இவன் ஆடுகளின்
ஆசிரியன்!
கரடுகள் இவன்
களம்!

கடைவாய்ப்புண்
கந்தலாடை
இவன் அடையாளம்!!

வெயில் இவன்மீது
விலாசம் எழுதும்!
மழை மறுபடி வந்து
அழித்துவிட்டு போகும்!

ஈத்துக்கவுச்சியும்
ஈயச்சட்டி கஞ்சியும்
மத்திய வேளைகளில்
இவன் பசியாருக்கும்!

பட்டி நிறைந்தாலும்
இவன் முதலாளி வீட்டின்
வட்டி குறையாது !!

இறை எடுத்தபின்
ஏரிக்கரையில்
இளைப்பாறும் ஆடுகளிடம்
நியாயம் கேட்பான்!!

குழந்தை தொழிலார் முறையை
தோற்கடிப்போம் என்று!!
ஆடுகளும் அப்போதைக்கப்போது
ஆமென்று
தலையசைக்கும் !

எழுதியவர் : ஸ்ரீஜே (12-Sep-17, 3:36 pm)
பார்வை : 64

மேலே