தொலைந்து போன அப்பா அம்மா

என் நண்பர் ராமன் சாதாரண குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார்.அவர் மணைவி தினம்
படிக்காததால் வெறுமனே வீட்டு வேலை செய்து வந்தாள்.

இருவரும் தங்கள் ஒரே பிள்ளை மீது அளவிலா ஆசையை பொழிந்து அவனுக்கு ஒரு குறையும்
இல்லாமல் படிக்க வைத்துக் கொண்டு வந்தார்கள்.
பையன் B.E.படித்து முடித்தவுடன் அவனை இருவரும் " அப்பா சேகர் நீ சென்னையிலே ஏதாவது
ஒரு நல்ல வேளைத் தேடி கிட்டு எங்க கூட இருந்து வா. உனக்கு வேலை நிரந்தரம் ஆனா உடனே
உனக்கு ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம். நான் ரிடையர் ஆனவுடன்
உன் குழந்தைகளை நானும் அம்மாவும் நல்ல விதமாக கவனிச்சு வளர்த்து வரோம். நீயும் உன்ன
பெஞ்சாதியும் எங்க கூட சந்தோஷமா இருந்து வாப்பா" மிகவும் கெஞ்சினார்கள்
ஆனால் சேகர் " இல்லேப்பா சென்னையிலே என்ன இருக்குப்பா. நான் அமேரிக்கா போய் மேல்
படிப்பு படித்து ஒரு நல்ல வேலைத் தேடிக்கப் போறேன்" என்று பிடிவாதம் பிடித்த வந்தான்.என்ன
சொல்லியும் அவன் கேக்காமல் பிடிவாதம் பிடிக்கவே வெரி வழி இல்லாமல் இங்கேயும் அங்கேயும்
கடன் வாங்கி பையன் சேகர் ஆசை பட்டது போல் அமேரிக்கா அனுப்பி வைத்தார்.
சேகர் அமேரிக்கா கிளம்பிப் போன பிறகு மிகவும் மனம் உடைந்து போனார்கள் ராமனும் அவர்
மனைவியும். மாதம் ஒரு முறை அம்மா அப்பாவுக்கு போன் பண்ணி தான் மிக நன்றாய் படித்து
வருவதாக சொல்லி வந்தான்.
ராமன் ரிடையர் ஆவதற்கு முன் அவர் வேலை செய்து வந்த இடத்தில் அவரும் அவர் கூட
வேலை செய்து வந்தவர்களில் யாரோ ஒருவர் செய்த தவறுக்காக அவரும் சம்பந்தப் பட்டதால்
ராமனும் தண்டிக்கப் பட்டு ரிடையர் அங்கும் போது அவருக்கு ரிடையர் ஆகும் போது முழுமையான
ரிடையர் ஆகும் போது முழு பணமும் வராமல் பாதி பணம் தான் கைக்கு வந்தது.அவர் கைக்கு.
மனம் வருத்தப் பட்டு வீட்டுக்கு வந்தார். வந்து நடந்த எல்லா சமாசாரங்களை விவரமாக சொல்லி
தனக்கு வந்த பாதி ரிடையர் ஆனா பணத்ததின் செக்கைக் கொடுத்தார் ராமம் மணைவி மிகவும்
வருத்தப் பட்டுக் கொண்டு செக்கை பீரோவில் வைத்து விட்டு " கவலைப் படாதீஙக. நம்ப பையன்
சேகர் படிச்சு முடிச்சு நல்ல வேலை செய்ய ஆரம்பிச்சா, அவன் நமக்கு பணம் அனுப்புவாங்க" என்று
தேத்தறவு சொன்ன்னாள்
வயித்தை வாயை கட்டி அவர் இருந்த வாடகை வீட்டிலே வாழ்ந்து வந்தார்.
மாசம் ஒரு தடவை பேசி வந்த சேகர் வர வர அந்த பிசு குறைஞ்சு வர ஆரம்பித்தான்
சேகர் அமேரிக்கா போய் .நாலு வருஷம் வேலை செய்து வந்த பிறகு ஒரு எமரிக்கா பெண்ணை
ஆசைப் பட்டு கல்யாணம் பண்ணிக்க கொண்டு சந்தோஷமாக இருந்து வந்தான்.ராமனுக்கு அமேரிக்கா
பேச வசதி இல்லாததால் அவர் தன் ஆசை பையனுடன் பேச முடியவில்லை.
ராமன் தன நண்பர்களிடம் தன சோக கதையை சொல்லி வருத்தப் பட்டு வாழ்ந்து வந்தார்.
பல வருஷங்கள் ஆகி விட்டதே பால்ய நண்பன் ராமனைப் பார்த்து விட்டு வரலாமே என்று
அவனுக்கு போன் பண்ணினேன்.என்ன ஆசாராம் அவன் போன் வேலை செஞ்சு ராமன் பதில் பேசினார்.
அவர் தான் வசித்து வந்த பழைய வீட்டிலே இருப்பதாக சொன்னார்.நான் அவர் வீட்டைத் தேடி
போனேன்.அவரும் அவர் மனைவியும் மிகவும் மெலிந்து வாட்டமாய் இருப்பதை பார்த்து வருத்தப்
பட்டேன்.இருவரும் பழைய பல விஷயங்களை கொஞ்ச நேரம் பேசினோம்.என்னிடமும்
தன சோக கதையை சொல்லி பதினைஞ்சு வருஷமா தன ஒரே பையனுடன் பிசு வார்த்தை இல்லாமல்
வாழ்ந்து வருவதாகவும் சொல்லி கண்களில் கண்ணீர் விட்டார். நான் அவருக்கு ஆறுதலாக பேசினேன்.
நாங்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது அவர் போன் மணி அடித்தது. போனை எடுத்து
பேசினார்.அவர் மகன் சேகர் தான் அமெரிக்காவில் இருந்து பேசினான்.சந்தோஷப பட்டு போனை
எடுத்து பேசினார் ராமன். 'பரவாயில்லையே நம்ப பையன் நம்மை ஞாபகம் வச்சு கிட்டு இருக்கானே'
என்று சந்தோஷப பட்டார்.மனதில் தான் ஒயின் வைத்து இருந்த BSNL கம்பெனிக்கு மனதில் தன்
நன்றியைத் தெரிவித்தார்
:"அப்பா நான் தான் சேகர் பேசறேன். போனில் பேசினான்.போன வருஷ என் பையனுக்கு '
அப்பெண்டிசைட்ஸ' உடம்பு வந்தது ஆபரேஷன் செஞ்சு இப்போ நல்லா இருக்கான். அதே மாதிரி என்
பொண்ணுக்கு அம்மை போட்டி இப்போ சுமாராக ஆகி வந்து இருக்குது.இங்கே இருந்து வரும் ஒரு
வயசான பாட்டி என் கிட்டே ' சேகர் நீ இந்தியா போய் உன் பையனுக்கு வைதீஸ்வரன் கோவிலுக்கு
போய் மா விளக்கு போட்டு வேண்டிக்கோ. அப்படியே சமயபுரம் கோவிலுக்குப் போய் அர்ச்சனைப்
பண்ணி சமயபுரம் அம்மன் குங்குமத்தை உன் பெண்ணுக்கு தடவி வா'ன்னு சொன்னாங்க. இப்போ என்
பையனுக்கும் பொண்ணுக்கும் பள்ளிக்கு லீவு.நான் அடுத்த வாரம் சென்னைக்கு என் குடும்பத்தோடு
வரோம் நீங்களும் அம்மாவும் எங்களோடு வர முடியுமா" என்று கேட்டான்.ராமன் பதில் ஒன்றும்
சொல்லாமல் போனை வைத்து விட்டார்.
உடனே ராமன் தன மணைவியை பார்த்து " லஷ்மி நம் சேகர் தான் பேசினான்.போன வருஷ
அவன் பையனுக்கு ' அப்பெண்டிசைட்ஸ' உடம்பு வந்ததாம் ஆபரேஷன் செஞ்சு இப்போ நல்லா
இருக்கானாம். அவன் பொண்ணுக்கு அம்மை போட்டி இப்போ சுமாராக ஆகி வந்து இருக்குதாம். அங்கெ
இருந்து வரும் ஒரு வயசான பாட்டி அவன் கிட்டே 'சேகர் நீ இந்தியா போய் உன் பையனுக்கு
வைதீஸ்வரன் கோவிலுக்கு போய் மா விளக்கு போட்டு வேண்டிக்கோ. அப்படியே சமயபுரம்
கோவிலுக்குப் போய் அர்ச்சனைப் பண்ணி சமயபுரம் அம்மன் குங்குமத்தை உன் பெண்ணுக்கு தடவி வா
ன்னு சொன்னார்களாம். இப்போ என் பையனுக்கும் பொண்ணுக்கும் பள்ளிக்கு விடுமுறையாம். அவன் .
நான் அடுத்த வாரம் சென்னைக்கு என் குடும்பத்தோடு வரானாம்.உன்னையும் என்னையும் அவன் கூட
வந்து பிரார்த்தனைகளை செஞ்சு குடுக்க முடியுமான்னு கேட்டான்"என்று சொல்லி நிறுத்தினார்.

பிறகு ராமன் என்னைப் பார்த்து ' கேசவா அந்த காலத்திலேயோ, இல்லை நிஜ
வாழ்க்கையிலோ இல்லை கதைகளிலோ இல்லை சினிமாவிலோ தான் அப்பா அம்மா தாங்கள் பெற்ற
குழந்தைகளை ஒரு திருவிழாவிலோ அல்லது ரயில் வண்டியில தொலைத்து இருக்கோம் பிறகு பல
இடங்களில் கஷ்டப் பட்டு தேடி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெயிண்ட் கொடுத்து பல வருஷம் கழிச்சு
அதிர்ஷ்டவசமாக நமக்கு கிடைத்து இருக்கிறார்கள். ஆனால் என் பையன் சேகருக்கோ பதினைஞ்சு
வருஷம் எங்களை மறந்து போய் இருந்தும் இப்போ ஒரு கஷ்டமும் இல்லாமல் ஒரு போன் Call
செய்த்ததும் அவனுக்கு அவன் அப்பா அம்மா கிடைத்து விட்டாங்க.என்ன வினோதம் பாரு" என்று
கிண்டலாகவும் வருத்தமாகவும் சொன்னார்..
.
ஆனால் அவர் மனைவியோ " அது ஒன்னும் இல்லிங்க.நம்ப அவசியம் அவனுக்கு இப்போ
இருக்குதுங்க அதான் போன் பன்றான்.பதினைஞ்சு வருஷமா நாம இருக்கோமா செத்தோமான்னு
விசாரிக்க நேரமும் இல்லே அவசியமாகவும் படலே. வேலையே பாருங்க. என்ன உறவுங்க இது.
இந்த உறவு இருந்தா என்னங்க இல்லாவிட்டா என்னங்க சொல்லுங்க" என்று கத்தினாள்.

நான் வாயடைத்து போய் அவர்கள் இருவரையும் பரிதாபமாக பார்த்து கிட்டு இருந்தேன்!!!!!!!!!!
.

.

.

.


"
.

எழுதியவர் : ஜெ சங்கரன் (12-Sep-17, 9:10 pm)
சேர்த்தது : Sankaran
பார்வை : 268

மேலே