என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 34
"டேய்....எதுக்கும் விஜிக்கு போன் பண்ணி கேளு டா, அவங்களுக்கு போன் பண்ணிருப்பான்" என்றான் ரியாஸ்.
"இல்ல டா, பண்ணிருக்க மாட்டான், உயிரே போனாலும் அவன் பண்ண மாட்டான்" என்றான் முபாரக்.
காயத்ரிக்கு நன்றாக புரிந்தது, விஜியின் வார்த்தைகள் இவர்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்று. ஆனால் ஒன்றும் பேசமுடியாமல் அமைதியாய் நின்றிருந்தாள்.
"சரி, நர்கீஸ், நீ எதுக்கு வெயிட் பண்ணற, நீ காயத்ரியை கூட்டிட்டு போ, நான் ஏதாவதுன்னா போன் பண்றேன், நீ கெளம்பு, ப்ரெய் பண்ணிக்கோ" என்றான் முபாரக்.
"இல்ல முபாரக், நான் போகல, இந்த நெலமை ல நான் போக விரும்பல" என்றால் நர்கீஸ்.
"ஏய், போ, காயத்ரிக்காக போ, அவ எதுக்கு தேவை இல்லாம நமக்காக இங்க வெய்ட் பண்ணனும், பாவம் போய் தூங்கட்டும் நேரத்தோட" என்றான் முபாரக்.
"இல்ல அண்ணா, பரவால்ல, நான் வெய்ட் பண்றேன் அண்ணா" என்றாள் காயத்ரி.
"இல்ல காயத்ரி, என்ன ன்னு தெரில, எவ்ளோ நேரம் ஆகும் னு தெரில, நீ போ, ஏய்...இப்போ நீ கெளம்பரியா இல்லையா நர்கீஸ்?" என்றான் முபாரக்.
"சரி.....ஒரு ஹாப் நவர் பாத்துட்டு போறேன்" என்றாள் நர்கீஸ்.
"புரிஞ்சுக்க மாட்டேங்கறியே நர்கீஸ், சரி, இரு" என்றான் முபாரக்.
கூட்டம் குறைந்தது பேருந்து நிலையத்தில், ஆயிரக்கணக்கில் இருந்த மக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் குறைந்திருந்தனர்.தூரத்தில் ஒரு சாண்ட்ரோ கார் வருவதை போல இருந்தது. ஆமாம் சாண்ட்ரோ தான், அனால் வண்டி முபாரக்கின் வண்டி அல்ல, மனம் பதறியது அனைவருக்கும்.
"டேய், முபாரக்...நீ விஜிகிட்ட கேளு டா, மே பி விஜி ப்ரவீனுக்கு போன் பண்ணிருக்கலாம் இல்ல?" என்றான் ரியாஸ்.
"அந்நேரம் ரியாஸுக்கு ஒரு போன், "ஹலோ, டேய் கணபதி, சொல்லு டா" என்றான் ரியாஸ்,போனில் மதினா பேருந்தின் கண்டக்டர் கணபதி பேசினான்.
"ரியாஸ் அண்ணா, ட்ரிப் முடிஞ்சுபோச்சு அண்ணா, பஸ் ச எஸ்.எஸ்.டீ ஷெட் ல விட்டுட்டு நைட் தூங்கிடறேன் அண்ணா" என்றான் கணபதி.
"டேய், ஒரு விஷயம் பானு, இங்க நம்ம நர்கீஸ் காயத்ரி அர்ச்சனா வாசல் ல நிக்கறாங்க, அவங்கள ஆயில் மில் ஸ்டாப்பிங்க்ல நர்கீஸ் வீட்ல விட்டுட்டு அப்புறம் ஷெட் கு போ" என்றான் ரியாஸ்.
"சரிண்ணா, அப்டியே பண்ணிடறேன், அவங்கள க்ராஸ் பண்ணி வர சொல்லு அண்ணா" என்றான் கணபதி.
"சரி.....நர்கீஸ், நீயும் காயத்ரியும் அந்த பாண்டி ரூட்ல போற பஸ் நிக்கற ஏரியா ல மதினா பஸ் நிக்கும், நீங்க போங்க, கிளம்புங்க, என்னடா முபாரக், ஓகே தான?" என்றான் ரியாஸ்.
"ஆமாம் நர்கீஸ், நீங்க கிளம்புங்க" என்றான் முபாரக்.
"சரி டா, பீல் பண்ணாத, டென்சன் ஆகாத, ஒண்ணும் ஆகாது, ஏதா இருந்தாலும் கால் பானு, ஏதாவது ஹெல்ப் நா சொல்லு, நான் அப்பாகிட்ட சொல்றேன்" என்றாள் நர்கீஸ்.
"ஏய், தேவை இல்லாம யாரையும் டிஸ்டர்ப் பண்ணாத, அதுனால தான் நான் எங்க க்ரூப்புக்கே ஒண்ணும் சொல்லல" என்றான் முபாரக்.
நர்கீஸ், காயத்ரியையும் அவனது தம்பியையும் கூட்டிக்கொண்டு கிளம்பினாள்.
"என்ன அக்கா, நல்லா இருக்கீங்களா, நம்ம பஸ் ல வர்றதே இல்ல இப்போ எல்லாம்" என்றபடி நர்கீஸை வரவேற்றான் கணபதி.
"இல்ல டா, அந்த ரூட் ல எந்த வேலையும் இல்ல" என்றாள் நர்கீஸ்.
"என்ன, மேடம், உடம்பு ஓகே வா," என்றான் காயத்ரியிடம்.
தலையை மட்டும் ஆட்டினாள் காயத்ரி.
"கலெக்ஷன் எப்படி போகுது டா" என்றாள் நர்கீஸ்.
"நமக்கு என்னக்கா, நல்லா போகுது" என்றான் கணபதி.
"சாப்டியா டா நீ" என்றாள் நர்கீஸ்.
"இல்லக்கா, உங்கள விட்டுட்டு தான்" என்றான் கணபதி.
"சரி, அப்போ நீ ஒண்ணு பண்ணு, வண்டிய எங்க விடப்போற"என்றாள் நர்கீஸ்.
"எஸ்.எஸ்.டீ ஷெட் ல அக்கா" என்றான் கணபதி.
"சரி, அங்க விட்டுட்டு நீ எங்க வீட்டுக்கு வா, அங்க டின்னை சாப்பிடலாம், உற்றது யாரு இன்னிக்கு, கோபி தான" என்றாள் நர்கீஸ்.
"ஆமாம் அக்கா, கோபி தான், என்ன சாப்பாடு கா, மட்டன் பிரியாணி யா?" என்றான் கணபதி.
"டேய், வாடா என்ன இருக்கோ சாப்பிடலாம்" என்றபடியே போனை எடுத்து வீட்டுக்கு போன் செய்தாள் நர்கீஸ்.
"அம்மா, ரியாஸோட ட்ரைவர் கண்டக்டர் வீட்டுக்கு சாப்பிட வராங்க, என்ன சாப்பாடு மா?" என்றாள் நர்கீஸ்.
"என்ன பண்ணனும் னு சொல்லு டி" என்றாள் நர்கீசின் தாய்.
"அம்மா, எது இருந்தாலும் ஓகே" என்றாள் நர்கீஸ்.
"சப்பாத்தி சிக்கன் மசாலா, ஓகே வா" என்றாள் நர்கீசின் தாய்.
"ஓகே மா" என்றாள் நர்கீஸ்.
"டேய், கோபி...வண்டிய ஷெட் ல விட்டுட்டு அக்கா வீட்ல சாப்பிட போய்டலாம் டா" என்றபடி கோபியின் அருகே சென்றான் கணபதி.
"அக்கா, நீங்க எல்லார்கூடயும் இவ்ளோ சோசியலா இருக்கீங்க, எல்லாரும் உங்ககிட்ட இவ்ளோ உரிமையா பேசறாங்க, நீங்க கிரேட் அக்கா" என்றாள் காயத்ரி.
"நானும் பயங்கர மூடி டைப் தான், பட் முபாரக் அண்ட் டீம் என்னை இப்டி சோசியலா ஆக்கினாங்க, எவ்ளோ ஒரு நல்ல மனசு எல்லாருக்கும், ஆனா இன்னிக்கு இந்த பிரவீன்....ச்ச" என்றாள் நர்கீஸ்.
"ச்ச, முபாரக் அண்ணா எவ்ளோ பீல் பன்றாரு, மனச இப்டி கஷ்டப்படுத்திட்டு எங்க போனாரு இந்த பிரவீன், சரியான மெண்டல்" என்றாள் காயத்ரி.
ஏய், மெண்டல் னு எல்லாம் சொல்லாத, முபாரக்க கஷ்டப்படுத்திட்டு போயிருக்கன்னு நினைக்காத, அவன் என்ன கஷ்டத்துக்கு இருக்கான் னு தெரியுமா.விடு....ஒண்ணும் ஆகாது" என்றபடி நர்கீஸ் முபாரக்கிற்கு கால் செய்தாள்.
"என்ன டா, என்ன ஆச்சு" என்றாள் நர்கீஸ்.
"தெரில, என்ன பண்ரான் னு தெரில, பெட்டெர், நாங்க இன்னும் ஒரு மணி நேரம் பாக்கறோம் வெய்ட் பண்ணி, அப்புறம் அவனுக்கு ஒரு மெசேஜ் நாங்க உன்னோட வீட்ல இருக்கோம் னு போட்டுட்டு உன் வீட்டுக்கு வரோம், அவனுக்கு ஈஷா அல்லாஹ் ஒண்ணும் ஆகாம எப்பவாச்சும் செல்ல ஆன் பண்ணினா என் மெசேஜ் பாப்பான்" என்றான் முபாரக்.
"ஈஷா அல்லாஹ், ஒண்ணும் ஆகாது டா அவனுக்கு, சரி, நீ வா, நான் அம்மா கிட்ட சொல்லிடறேன், நீ சாப்ட, ரியாஸ் சாப்டானா?" என்றாள் நர்கீஸ்.
"கேக்கவே இல்ல, ஏய் மச்சான் நீ சாப்டியா டா" என்றான் முபாரக்.
"சாப்பாடா முக்கியம், ப்ரவீனுக்கு என்ன ஆச்சுன்னு தெரில" என்றான் ரியாஸ்.
"சரி, நான் அவனுக்கும் சாப்பிட ஏதாவது ரெடி பண்ணி வெக்கறேன்" என்றாள் நர்கீஸ்.
சற்று நேரத்தில் நர்கீசின் வீடு வந்தது.
என்ன ஒரு பிரம்மாண்ட வீடு, இவ்வளவு பணக்கார பெண் எவ்வளவு சாதாரணமாக எல்லாருடன் நன்றாக பழகி எல்லாருக்கும் பிடிக்கும்படி மதிக்கும்படி நடந்துக்கறாங்க....என்று எண்ணியபடியே ஆவலுடன் உள்ளே வந்தாள் காயத்ரி.
"ம்ம்ம், காயத்ரி, இது என் அப்பா, அன்னிக்கு பாத்திருப்ப, இது என் அம்மா,...அம்மா இது காயத்ரி...நான் சொன்னேன் இல்ல, விஜி அண்ட் காயத்ரி....இது தான் அந்த காயத்ரி....இது அவளோட தம்பி....காயத்ரி, நீ போய் அது தான் என் ரூம், அதுல இரு, நான் நம்ம கோபி கணபதி க்கு சாப்பாடு குடுத்துட்டு வரேன்" என்றாள் நர்கீஸ்.
நர்கீசின் அறையை பார்த்த காயத்ரி வியப்பில் ஆழ்ந்தாள்.உள்ளே....எவ்வளவு அழகிய காட்சிகள்....
சிவப்பு நிற கிங் சைஸ் படுக்கை, ஓ ஜெனரல் குளிர் சாதன வசதி, நீல நிற சுவர் பூச்சு, அழகிய விளக்குகள், பாடல் கேட்கும் வசதி, தனி தொலைக்காட்சி பெட்டி, அழகிய ட்ரெஸ்ஸிங் டேபிள்,பொம்மைகளின் அணிவகுப்பு, சுவற்றில் முபாரக்கின் முழு நீள வரைபடம், ஒருபக்கம் முபாரக்கின் மொத்த அணியின் மத்தியில் நர்கீஸ் நிற்கும் புகைப்படம், விளக்கை அணைத்தால் வானம் போல தோன்றும் ரேடியம் ஸ்டிக்கர்கள்......சொர்க்கம் போல இருந்தது....ஆனால் மனமோ ப்ரவீனுக்கு என்ன ஆகி இருக்குமோ என்ற பதற்றத்தில் இருந்தது.
சற்று நேரத்தில் நர்கீஸ் வந்தாள்."என்ன காயத்ரி, தூங்கலையா, எ.சி.போட்டுக்க வேண்டிது தான" என்றாள்.
"அக்கா, நீங்க இவ்ளோ சோஃபிஸ்டிகேட்டடா இருக்கீங்க, ஆனா சாதாரணமா எங்ககூட பஸ் ல வரீங்க, சாதாரண ஹோட்டல் ல எங்ககூட சாப்பிடறீங்க, எங்கள்மாதிரி சாதாரண ஆளு கூட எல்லாம் ரொம்ப சகஜமா பழக்கறீங்க, சின்ன டீ கடைல டீயை குடிக்கறீங்க.....உங்கள புரிஞ்சுக்கவே முடில" என்றாள் காயத்ரி.
"காயத்ரி.....எல்லாம் நம்ம கைல தான் இருக்கு, கோபி கணபதி சாதாரண ட்ரைவர் கண்டக்டர், அதும் எனக்கும் அவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பையனோட பிரெண்டோட பஸ் ல ஒரு ட்ரைவர் கண்டக்டர்....அப்டின்னு நெனைக்கறதைவிட, அவன் என்னை மாதிரி ஒரு உயிர், அவன்கிட்ட என்ன டா, எப்படி இருக்க னு சொல்லி நம்ம கூட சாப்பிட சொன்னா....அவனுக்கு நாம அன்னிக்கு கடவுள் ஆறோம்,மனுஷனா இருக்கற இந்த பிறவி ல கடவுள் ஆய்டலாம் ஈஸியா காயத்ரி" என்றாள் நர்கீஸ்.
"அக்கா....பிரவீன்..." என்றாள் காயத்ரி.
"இல்ல காயத்ரி, இப்போ தான் முபாரக் போன் பண்ணினான், எந்த இன்பார்மேஷனும் இல்ல, முபாரக் அண்ட் ரியாஸ் வந்துட்டு இருக்காங்க" என்றாள் நர்கீஸ்.
"அக்கா....ஏதாவது ஆக்சிடென்ட் கீக்சிடெண்ட் ஆயிருக்குமா" என்றாள் காயத்ரி.
"அப்டி எல்லாம் நினைக்காத, பேசாம படு" என்றாள் நர்கீஸ்.
கட்டிலில் சாய்ந்தாள் காயத்ரி. பக்கத்தில் அவளது தம்பி தூங்கி இருந்தான்.
அவளுக்கு போர்த்திவிட்டுவிட்டு அருகில் இருந்த சிட்டிங் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தாள் நர்கீஸ்.
"அக்கா, நீங்க இங்க படுங்க, நான் கீழ படுத்துக்கறேன்" என்று எழுந்தாள் காயத்ரி.
"ஏய்....இல்ல இல்ல, நீ படு, நான் முபாரக் கு வெய்ட் பண்றேன், அப்பா அம்மா தூங்கிட்டாங்க" என்றாள் நர்கீஸ்.
சற்று நேரத்தில் முபாரக்கும் ரியாஸும் வந்தனர்.
"ரியாஸ்...ஏதும் பேசவேணாம், நீ முதல்ல சாப்பிடு" என்றாள் நர்கீஸ்.
"இல்ல நர்கீஸ், பிரவீன்..." என்றான் ரியாஸ்.
"நீ சாப்பிடு அவ்ளோதான்" என்றபடி தட்டில் சப்பாத்தி போட்டு எதுத்து வந்தாள் நர்கீஸ்.
"முபாரக்....நீ போய் என் ரூம் ல வெய்ட் பண்ணு, காயத்ரி தூங்கிருப்பா, அவளை டிஸ்டப் பண்ணிடாத, லைட் போடாம உள்ள போ" என்றாள் நர்கீஸ்.
முபாரக் மெல்ல உள்ளே சென்றான்.
"அண்ணா....பிரவீன் அண்ணா என்ன அண்ணா ஆனார், ஏதாவது இன்பார்மேஷன்?" என்றாள் காயத்ரி.
"இன்னும் தூங்கலையா மா நீ, தெரியம்மா, என்ன ஆனான் னு தெரில, அல்லாஹ் எதுக்கு இப்டி சோதிக்கறாருனு தெரில" என்றான் முபாரக்.
பேசிக்கொண்டிருக்கும்போது முபாரக்கின் போனில் ஒரு லைட் எரிந்தது, என்னவென்று பார்த்தபோது ப்ரவீனுக்கு அவன் அனுப்பிய மெசேஜ் டெலிவெர்ட் என்று வந்தது.
சந்தோஷத்தில் துள்ளி குதித்தான் முபாரக். "ரியாஸ்....நர்கீஸ்..."என்று கூப்பிட்டான் முபாரக்.
இருவரும் ஓடி வந்தனர்.
"டேய், அவனோட போன் ஆன் ஆயிருக்கு டா, மெசேஜ் டெலிவெர்ட் னு வந்துச்சு டா" என்றான் முபாரக்.
"டேய்...கால் பண்ணு டா" என்றான் ரியாஸ்.
கால் செய்தான் முபாரக்.போனை அட்டென்ட் செய்தான் பிரவீன்.
"டேய்....எங்கடா இருக்க, ஒண்ணும் இல்லையே உனக்கு, எங்கடா இருக்க" என்றான் முபாரக்.
"டேய்...நான் நர்கீஸ் வீடு வாசல் கிட்ட வந்துட்டேன் டா" என்றான் பிரவீன்.
சந்தோஷத்தில் போனை போட்டுவிட்டு கீழே ஓடினான் முபாரக், பின்னாலேயே ரியாஸும் நர்கீஸும் காயத்ரியும் ஓடினர்.
வாசல் கதவை திறந்ததும் அங்கே பிரவீன் காரை பார்க் செய்துவிட்டு வந்துகொண்டிருந்தான்.
ஓடிச்சென்று அவனை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதேவிட்டான் முபாரக்.சத்தமாக அழுதான். ரியாஸும் அவனை கட்டி பிடித்துக்கொண்டான்.
"என்ன டா, என்ன ஆச்சு மச்சான், எதுக்கு இவ்ளோ டென்சன்" என்றான் பிரவீன்.
"டென்க்ஷனா....பாதி செத்துட்டோம் டா, எங்க டா போனே நீ" என்று பிரவீனை அறைந்தான் ரியாஸ்.
"உனக்கு ஒண்ணும் ஆகல இல்ல டா, பயந்துட்டேன் டா, சத்தியமா இனிமே இப்டி பண்ணாத டா, சொல்லிட்டு செய் டா, எங்கடா போன" என்றான் முபாரக்.
எதிர்பாராத விதமாக நர்கீஸ் பிரவீனின் அருகே வந்து..."எங்க டா போன, நாயே, எவ்ளோ பதட்டப்பட்டுட்டோம் தெரியுமா, எங்க நானும் கலங்கிட்டா முபாரக் ஒடஞ்சு போயிருவான் னு மனசுல கஷ்டத்தை வெச்சுகிட்டு அழாம இருந்தேன் டா....." என்றாள்.
"ஏய்...நர்கீஸ், என்ன ஆச்சு இப்போ, நீ என்ன இப்டி பீல் பண்ற" என்றான் பிரவீன்.
"டேய்...நானே அழுதுட்டேன் டா" என்றான் முபாரக்.
"நீ என் தம்பி டா, முபாரக் எவ்ளோ முக்கியமோ நீ அவ்ளோ முக்கியம் டா, ஏன்னா என் முபாரக் கு என்னை விட நீ முக்கியம், அவன் சந்தோசம் தான் எனக்கும் சந்தோசம், நீ எனக்கு தம்பி டா.....இனிமே இப்டி கஷ்டப்படுத்தாத...சரி வா, சாப்பிடு" என்று உள்ளே கூட்டிச்சென்றாள் நர்கீஸ்.
அவளே ஊட்டிவிட்டாள் ப்ரவீனுக்கு. முபாரக் இன்னும் சப்பாத்தி சுட்டு எடுத்துவந்து கொடுத்துக்கொண்டிருந்தான். ரியாஸ் அவன் குளிப்பதற்கு கைஸர் போட்டு எல்லாம் தயார் செய்தான்.இதை பார்த்த காயத்ரி இந்த பாசத்தின் ஆழம் என்ன என்பதை உணர்ந்தாள்.ஆனாலும் விஜிக்காக ஏதும் பேசாமல் வெளிக்காட்டாமல் இருந்தாள்.
எல்லாரும் எல்லாம் முடிந்து நர்கீசின் அறையில் கூடினர்.
"இப்போ சொல்லு டா.எங்க போன, என்ன பண்ணின, ஏன் எங்க போன் அட்டென்ட் பண்ணல" என்றான் முபாரக்.
"டேய்...உன்கிட்ட சொல்றதுக்கு என்ன...ஒரு நிமிஷம்...காயத்ரி தூங்கிட்டாளா" என்றான் பிரவீன்.
நர்கீஸ் அவளை எட்டி பார்த்துவிட்டு "தூங்கிட்டா" என்றாள்.
ஆனால் பிரவீன் கேட்டபோது தான் கண்களை மூடி தூங்குவது போல பாசாங்கு காட்டினாள் காயத்ரி.
"இல்ல டா, உனக்கே தெரியும் . விஜியோட அப்பா பயங்கரமா தண்ணி அடிக்கறாரு. அது விஜிக்கு பிடிக்கல, விஜியோட அப்பா மட்டும் தண்ணி அடிக்கலன்னா அவரைப்போல தலைசிறந்த அப்பா உலகத்தில் யாருக்கும் இருக்க முடியாததுன்னு எனக்கு பலமுறை மெசேஜ் அனுப்பி பீல் பண்ணிருக்காங்க. அதுமட்டும் இல்ல, தண்ணி அடிச்சுட்டு தெரு முனை ல விழுந்துருவாரு, ரெண்டு வயசுக்கு வந்த பொண்ணு அவரை வீட்டுக்கு தூக்கிட்டு வரும்போது எல்லாரும் பாப்பாங்க, தப்பா பேசுவாங்க, அப்டி இப்படின்னு நெறையா பீல் பண்ணாங்க டா" என்றான் பிரவீன்.
"அதுக்கும் நீ இப்டி சொல்லாம போனதுக்கு என்ன டா சம்மந்தம்" என்றான் ரியாஸ்.
"இல்ல டா, விஜி அவங்க கூட என்னை.....என்னை மட்டும் இல்ல, நம்மள அவங்க கூட பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க, ஆனாலும் அவங்கமேல நமக்கு கேர் இருக்குன்னு நீ தான டா சொன்ன முபாரக்....." என்றான் பிரவீன்.
"ஆமாம் சொன்னேன் .....அதுக்கு என்ன டா இப்போ...நீ எங்க போன, என்ன பண்ண அதை சொல்லு" என்றான் முபாரக்.
"காயத்ரிக்கு எப்படி சப்போர்ட் பண்ணி அந்த தொல்லை குடுதானே அவனை கட்டம் கட்டினபோல விஜிக்கு ஒரு நல்ல விஷயம் பண்ண முடியும்னா அவங்க சந்தோஷப்படுத்தற ஒரே விஷயம் அவங்க அப்பாவை திருத்தறது தான டா" என்றான் பிரவீன்.
"டேய்....அந்த லெக்ச்சரருக்கு நாம தான் கட்டம் கட்டினோம் னு வெளில சொல்லிடாத...இது நம்ம ஆறு பேருக்கு தான் தெரியும். நீ, நான் ரியாஸ், விஜய், ரகு, நர்கீஸ். நம்ம பசங்ககிட்ட கூட சொல்லிடாத டா.காயத்ரி இப்போ சந்தோஷமா இருக்கா, அது தான் நமக்கு வேணும். இதை வெளில சொல்லி பெருமை பாட்டுக்கற விஷயம் இல்ல, நீ என்ன பண்ணினானு சொல்லு" என்றான் முபாரக்.
"அடுக்கு முன்னாடி, காயத்ரி உன்கிட்ட சொன்னாளா டா, அந்த செந்தில் கெளம்பறான் னு?" என்று கேட்டான் பிரவீன்.
"இல்ல டா.....உனக்கு புரியலையா டா....நாம என்னிக்கு இருந்தாலும் ஒரு டெம்பரரி பழக்கம் தான் னு காயத்ரி நெனைக்கறா.....அது தான் உண்மை கூட.....விஜி தான் காயத்ரிக்கு முக்கியம்....அது தான் சரியும் கூட.....நம்மளால முடிஞ்சுது ஒரு நல்லா படிக்கிற பொண்ணு, நாம மனசார சகோதரியோ ஏத்துக்கிட்ட பொண்ணு, அதுக்கு ஒரு ஆபத்துன்னா பாத்துட்டு இருக்க முடியுமா" என்றான் முபாரக்.
"ஆனாலும் உன்கிட்டேகூட சொல்லலியே டா" என்றான் பிரவீன்.
"அதுக்கு என்ன டா....அந்த பொண்ணு முகத்துல ஒரு சந்தோஷம் இருந்துச்சு டா, அதை paathadhe போதும்" என்றான் முபாரக்.
"இருந்தாலும் திருநெல்வேலி போய் அங்க இருந்து ஸ்கெச் போட்டு அவன் குடும்பத்தையே வெச்சு அவனை கட்டம் கட்டினது தான் டா பெரிய விஷயம், ஆனா இது கூட அவ புரிஞ்சுக்கல பாத்தியா" என்றான் பிரவீன்.
"டேய்...சின்ன பொண்ணு டா, நம்மள பொறுத்தவரைக்கும் நான் சொன்னது தான், அவங்க நமக்கு ஒரு குழந்தை மாதிரி, அவங்க என்ன சொன்னாலும் கோவமோ வெறுப்போ படக்கூடாது.ஆனா அவங்களா பேசற வரைக்கும் நாம அவங்கள டிஸ்டர்ப் பண்ணவே கூடாது டா, பொண்ணுங்களுக்கு வாழ்க்கைல நெறையா ப்ராப்ளேம் இருக்கும் டா, அதை அவங்களால வெளில காட்டிக்கவே கூட முடியாது.பாவம், விஜி அப்டி உன்கிட்ட பேசிருக்கான்னா எவ்ளோ கஷ்டத்தை அவ அனுபவிச்சிருக்கணும். நம்ம தப்பு பண்ணலன்னு நமக்கு தெரியும். அது அவளுக்கும் தெரியும். ஆனா, அவ அப்டி இருந்து தான் ஆகணும். " என்றான் முபாரக்.
"சரி, நீ என்ன பண்ணின டா" என்றான் ரியாஸ்.
"நான் கார பார்க்கிங் ல இருந்து எடுத்தேன் டா, அங்க விஜியோட அப்பா நின்னுட்டு இருந்தாரு, வேணும்னே அவர்கிட்ட போய் பக்கத்துல பிரேக் போட்டேன்,திட்டிகிட்டே என்னை வெளில வா னு கூப்டாரு.நானும் அவர்கிட்ட சார், சாரி சார், பாக்கலைன்னு சொல்லி, வாங்க சார், பார் கு போகலாம் னு வண்டி ல ஏத்திட்டு நேரா திருக்கோயிலூர் ரூட்ல விட்டேன், அவரும் நிறுத்து நிறுத்துன்னு கத்தினார்.நான் ஒரு 20 கிலோமீட்டர் போய் தான் நிறுத்தினேன். இறங்கினதும் என்னை பளார் னு அறைஞ்சாரு, நான் அமைதியா நின்னேன். அசிங்கமா திட்டினார், அமைதியா நின்னேன்.எதுக்கு டா இப்டி அமைதியா இருக்கன்னு கேட்டாரு, சார், என்னை ஞாபகம் இருக்கன்னு கேட்டு டிக்கெட் வாங்க சொன்னதை சொன்னேன். தெரிஞ்சுக்கிட்டாரு, அன்னிக்கு காசு குடுக்கலன்னு இப்டி கூட்டிட்டு வந்தியா ன்னு திட்ட ஆரம்பிச்சாரு.நான் ஒரு நிமிஷம் சார் னு சொன்னேன்.என்னன்னு கேட்டாரு. விஜி உங்க பொண்ணு தான னு கேட்டேன்....ஒரு நிமிஷம் அப்டியே சைலெண்டா நின்னாரு.உங்களுக்கு உங்க ரெண்டாவது பொண்ணு ரம்யாவை விட விஜி மேல பாசம் ரொம்ப அதிகம் இல்லையா.....உங்க பொண்ணு விஜி ரொம்ப சந்தோஷமா இருக்கணும் னு நீங்க நினைக்கறீங்க இல்லையா.....னு கேட்டேன்.என்னை ஆச்சர்யமா பாத்தாரு. சார்...உங்க பொண்ணு விஜி உங்கமேல அவ்ளோ உயிரா இருக்காங்க, எவ்ளோ நல்ல பொண்ணு சார்.......நீங்க தண்ணி மட்டும் அடிக்கலன்னா உங்களைப்போல ஒரு பெஸ்ட் தகப்பன் யாருக்கும் இல்லன்னு எவ்ளோ பெருமையா சொல்லிப்பாங்க சார்.அதுமட்டும் இல்ல, நீங்க உங்க பாலன்ஸ் இல்லாம உங்க தெரு முனைல பலநாள் விழுந்திருக்கீங்க, உங்களுக்கு நெனப்பு இருக்காது. ஆனா வயசுக்கு வந்த உங்க ரெண்டு பொண்ணுங்க உங்கள தெரு முனைல இருந்து வீடு வரைக்கும் தூக்கிட்டு போறாங்க சார், அது தெரியுமா....நீங்க எடுக்கற வாந்தி எல்லாம் சுத்தம் செஞ்சுட்டு அவ்ளோ ப்ராப்ளேத்துக்கு நடுவுல நல்ல படிச்சு க்ளாஸ் ல முதல் மார்க்.பெருமை படவேண்டிய ஒரு பொண்ணை கஷ்டப்படுத்தறீங்களே.....னு சொன்னேன்.அப்பாவும் என்னை அமைதியா பாத்தாரு.கொஞ்ச மீறும் நானும் அமைதியா இருந்தேன். அவரு பேசினார்.என் பொண்ணை உனக்கு எப்படி தெரியும் னு கேட்டாரு.சார், உங்க பொண்ணு ஜஸ்ட் ஒரு பிரென்ட்,பிரென்ட் கூட இல்ல, கடலூர் ல சுனாமி வந்தப்போ உங்கப்பொண்ணு கடற்கரை ல ஆட்டோக்கு காத்திருந்தப்போ நான் தான் கூட்டிட்டு வந்து அவங்க பாடி வீட்டில விட்டேன்.. அதுத கொஞ்ச நேரத்துல அவங்க காத்திருந்த இடம் கடலுக்கு 100 உள்ள இருந்துது, அதுல என் அம்மாவும் என் தங்கையும் போய்ட்டாங்க. உங்க பாசத்துக்காக தான் உங்க பொண்ணு கடவுளால் காப்பாத்தப்பட்டிருக்காங்க சார். இன்னும் நீங்க தண்ணி அடிக்காதிங்க சார், கொஞ்சம் கொஞ்சமா நிறுத்துங்க....நான் உங்கள இப்டி கூட்டிட்டு வந்தது தப்பு தான், அதுக்கு என்னை மன்னிச்சுருங்க.நான் இனிமே உங்க பொண்ணுகிட்ட பேச கூட மாட்டேன்....என் பேரு பிரவீன் சார், இது என்னோட போன் நம்பர், இது என் அட்ரஸ், என்னால உங்க பொண்ணுக்கு எந்த பிரச்னையும் வராது....உங்க மனைவி புவனா ஆன்டி கூட எனக்கு தெரியும். ப்ளீஸ் சார், உங்க பெண்ணுக்காக நீங்க இனிமே தண்ணி அடிக்றத நிறுத்துங்க. என்னை மன்னிச்சிருங்க.....வாங்க சார், போகலாம்.னு சொன்னேன்.கார்ல அமைதியா பேசாம வந்தாரு...உள்ளுக்குள்ள பயம்....எண்ணெயும் விஜியும் சேர்த்து தப்பா நெனச்சுடுவாருன்னு.....தப்பா ரைட்டானு தெரில, எனக்கு மனசுல விஜியோட சந்தோசம் தான் இருந்துது.விழுப்புரம் வந்ததும் இறங்கிட்டு, பிரவீன்....உடனே முடிலைன்னாலும் என் பெண்ணுக்காக என் குடும்பத்துக்காக நான் தண்ணிய விடறேன், என் பொண்ணு சந்தோஷத்துக்கு முன்னாடி இது என்ன......யாரோ நீ......என் பொண்ணு மேல இவ்ளோ அக்கறையா சொல்ற.....உன்ன பாத்தா சந்தேகமே வரல எனக்கு, ஏன் னா என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, தப்பான நட்பு அவளுக்கு இருக்காது. ரொம்ப தேங்க்ஸ் அப்டின்னு சொன்னாரு" என்றான் பிரவீன்.
காயத்ரியால் கண்ணீரை அடக்கவே முடியவில்லை. இப்படி ஒரு நண்பர்கள் மத்தியில் தானும் விஜியும் இருப்பதை உணராமல் விஜி இப்படி இவர்களை கஷ்டப்படுத்தி இருக்கிறாளே, அப்படி இருந்தும் அதை கொஞ்சமும் காட்டிக்கொள்ளாமல் எங்களுக்காக எவ்ளோ பண்ணிருக்காங்க என்று எண்ணி கலங்கினாள் காயத்ரி.
"அப்புறம் அவர் கிட்ட சொன்னேன்....நான் உங்ககிட்ட பேசினதா விஜிக்கு தெரிய வேணாம் சார், ப்ளீஸ் னு சொன்னேன் டா, விஜிக்கு அது பிடிக்குமா பிடிக்காதா னு தெரியாது, அவரு மாறிட்டா சந்தோசம். என்னை விட விஜி சந்தோஷப்படுவாங்க. அவங்க சந்தோஷமா இருக்கறத பாக்க முடிலனாலும் அவங்க மனசு சந்தோஷப்படறது போதும் டா" என்றான் பிரவீன்.
நர்கீஸ் பிரவீனை தலையில் தட்டி கொடுத்து "பெரிய மனசு டா உனக்கு" என்றாள்.
"நர்கீஸ், மறந்து போய் கூட காயத்ரி கிட்ட எதையும் சொல்லிடாத, விஜி சொன்ன உடனே நாங்க எல்லாரும் சுயநலமா அவங்க கூட பேசறதை நிறுத்திட்டோம் னே இருக்கட்டும். விஜி பண்ணது தப்புன்னு காயத்ரி நினைக்கவே கூடாது.அடகு அவங்க விஜி கூட வெச்சுருக்கற நட்புல ப்ராபளம் தரும்." என்றான் பிரவீன்.
"சரி டா, காயத்ரி கிட்ட நான் எவென் அந்த லெக்ச்சரர் விஷயத்தை கூட சொல்லல டா" என்றாள் நர்கீஸ்.
"சரி....நர்கீஸ், நீ தூங்கு, நாங்க கடலூர் போறோம், naalaikku மேட்ச் இருக்கு" என்றான் முபாரக்.
"டேய் என்ன வெளயாடுறியா, கார் பிரவீன் ஓட்டிட்டு வருவான், நீ இந்த பைக் ல நைட் ல ட்ராவல் பண்ண போறியா, திமிரா" என்றாள் நர்கீஸ்.
"இல்ல நர்கீஸ், பைக் நான் ஓட்டிட்டு போறேன், ரியாசும் முபாரக்கும் கார் ல போகட்டும்" என்றான் பிரவீன்.
"சொன்னா எங்க கேக்க போறீங்க" என்றாள் நர்கீஸ்.
ரியாஸ், முபாரக், பிரவீன் மூவரும் கிளம்பினர்.
காயத்ரியின் கலங்கிய கண்கள் மட்டும் கண்ணீரை நிறுத்தவே இல்லை.
பகுதி 34 முடிந்தது.
---------------தொடரும்----------------