என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 35
மறுநாள் பொழுது விடிந்தது....
காயத்ரி மெல்ல கண்களை திறந்து பார்த்தாள். பக்கத்தில் தம்பி இன்னும் உறங்கிக்கொண்டிருந்தான். நர்கீஸ் இல்லை. எழுந்து முகத்தை கழுவிக்கொண்டாள்.
"குட் மார்னிங் காயத்ரி" என்றபடி கையில் இருக்கும் காபியை காயத்ரிக்கு கொடுத்தாள் நர்கீஸ்.
"நீங்க எதுக்கு கா, காபி எல்லாம் போட்டு எடுத்துட்டு வரீங்க" என்றாள் காயத்ரி.
"நீ எங்க வீட்டு கெஸ்ட். இது ஸ்பெஷல் காபி, குடிச்சு பாரு" என்றாள் நர்கீஸ்.
"என்ன ஸ்பெஷல் அக்கா" என்றாள் காயத்ரி.
"இது வேர்ல்ட் பெஸ்ட் காபி டேவிடாப் தெரியுமா, அந்த பிராண்ட்" என்றாள் நர்கீஸ்.
குடித்தபடியே எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள் காயத்ரி.
"என்ன யோசிக்கற, எனி ப்ராப்ளேம்?" என்றாள் நர்கீஸ்.
"இல்லக்கா, நான் எவ்ளோ இம்மெச்சூரடா இருக்கேன், எது நல்லது எது கெட்டது யார் நல்லவங்க யார் கெட்டவங்க எதுவுமே எனக்கு புரியல, ஒண்ணு மட்டும் உண்மை....நான் என்னோட பிரென்ட் விஜி ரெண்டு பெரும் ஒரு குறுகிய வட்டம் போட்டு அது உள்ள இருக்கறது தான் கட்டுப்பாடு அது தான் வாழ்க்கை னு நெனச்சிட்டு இருக்கோம்" என்றாள் காயத்ரி.
"ஏய், என்ன...நீ இஞ்சினீரிங் ஸ்டூடெண்ட்டா இல்ல பிலாசபி ஸ்டூடண்டா, காலங்காத்தால சும்மா மனச போட்டு கொழப்பிக்கிட்டு, காபி குடிச்சுட்டு புது பிரஷ், சோப்பு, டவல், டிரஸ் எல்லாம் வெச்சுருக்கேன், போட்டுட்டு வா,தம்பி எழுந்துட்டான் னா ஜஸ்ட் சொல்லு, நான் கீழ கிச்சன் ல பூரி பண்றேன், அம்மா அப்பா ரெண்டு பேரும் வாக்கிங் போயிருக்காங்க." என்றாள் நர்கீஸ்.
"சரிக்கா, சொல்றேன்" என்றபோது காபியை குடித்து முடித்தாள் காயத்ரி.
"ஏய்....கப்ப குடு...." என்றாள் நர்கீஸ்.
"இல்லக்கா, நான் வாஷ் பண்ணிட்டு......"முடிப்பதற்குள் "நோ பார்மாலிடீஸ், குடு" என்று கப்பை வாங்கிக்கொண்டு கிச்சனை நோக்கி சென்றாள் நர்கீஸ்.
இப்போ நான் என்ன பண்ணனும், விஜய்கிட்ட எப்படி சொல்லி புரிய வெக்கிறது...காயத்ரியின் மனம் பெரிய சிந்தனையில் ஆழ்ந்தது.
சற்று நேரத்தில் காயத்ரி குளித்துவிட்டு கீழே கிச்சனுக்கு வந்தாள். அங்கே அவளுக்கு காலை உணவு தயாராய் இருந்தது.
"வா காயத்ரி......தம்பி எங்க, இன்னும் தூங்கறானா" என்றாள் நர்கீஸ்.
"ஆமாம் அக்கா, அது இருக்கட்டும், புது டிரஸ் எப்படி???" என்றாள் காயத்ரி.
"நல்லா இருக்கா....நேத்து முபாரக் வாங்கி குடுத்துட்டு போனான், உன் தம்பிக்கும் இருக்கு, சரி...அது இருக்கட்டும், வா சாப்பிடு, காலைலயே வீட்டுக்கு போகணுமா இல்ல ஈவினிங் போனா போதுமா?" என்றாள் நர்கீஸ்.
"காலைல அப்பா அம்மா வந்துருவாங்க அக்கா, சோ நாங்க சாப்பிட்டு கெளம்பறோம்" என்றாள் காயத்ரி.
"ஓகே, நீ சாப்பிடு, நான் தோ வரேன்" என்று சொல்லிவிட்டு ஹாலுக்கு சென்று போனை எடுத்துவந்தாள் நர்கீஸ்.
காயத்ரி சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
"ஹலோ, முபாரக்....காயத்ரி கிளம்பறேன் னு சொல்றா, ஷால் ஐ டிராப் ஹர்?" என்றாள் நர்கீஸ்.
அவனது பதில் வந்த பின், "சரி டா" என்றாள் நர்கீஸ்.
"ஓகே, சாப்பிட்டு நாம கிளம்பலாம், நான் போய் உன் தம்பிய எழுப்பி கூட்டிட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு போனாள் நர்கீஸ்.
கால் மணி நேரம் கழித்து தம்பியும் தயாரானான், அவனுக்கும் உணவு கொடுத்து கிளம்பினர் மூவரும்.
"அக்கா, எங்களை பஸ் ஸ்டான்ட் ல டிராப் பண்ணா போதும்" என்றாள் காயத்ரி.
"ஏய்...என்ன லூசா நீ....நம்ம கார் இருக்கு, வா" என்றபடி காரை நோக்கி நடந்தாள் நர்கீஸ்.
"என்ன யோசிக்கற, பயப்படாத, நான் நல்லா கார் ஓட்டுவேன், சும்மா வா" என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் நர்கீஸ்.
காரில் ஏறி உட்கார்ந்தாள் காயத்ரி.
"அக்கா, முபாரக் அண்ணா என்ன சொன்னாரு போன் ல" என்றாள் காயத்ரி.
"உன்னை கொண்டு விடவான்னு கேட்டேன், விடுன்னு சொன்னான் தட்ஸ் ஆல்" என்றாள் நர்கீஸ்.
"இல்லக்கா, வேற ஏதோ கேட்டார், நீங்க இன்னிக்கேவா னு கேட்டிங்க, அது என்ன" என்றாள் காயத்ரி.
"அதை சொல்றியா, நேத்து பிரவீன் நல்லபடியா வந்துட்டா காரை வித்து ஆஸ்ரமத்துக்கு அந்த காச அப்டியே தரேன் னு முபாரக் சொன்னான் இல்ல, அதுக்காக கார வைக்கறதுக்கு விலை பேச ராஜராஜன் மோட்டார்ஸ் கு போறானாம், இதான் இன்னிகேவான்னு கேட்டேன்" என்றாள் நர்கீஸ்.
காயத்ரிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
"அக்கா, காரை எதுக்கு வைக்கணும்"என்றாள் காயத்ரி.
"அவனை என்னால தடுக்க முடியாது, அவனுக்கு என்னை விட அவன் பிரெண்ட்ஸ் தான் முக்கியம், மோரோவர், அவன் சொன்னதை தான செய்யறான்" என்றாள் நர்கீஸ்.
"அக்கா, அன்னிக்கு நான் முபாரக் அண்ணன் நம்பர்ல கால் பண்ணப்போ நீங்க அட்டென்ட் செஞ்சீங்க, நான் முபாரக் அண்ணா எங்கன்னு கேட்டப்ப நீங்க அவரு வெளில போயிருக்காரு, போன் உங்ககிட்ட இருக்குன்னு சொன்னீங்க, உண்மையா சொல்லுங்கக்கா, அன்னிக்கு என்ன நடந்துச்சு" என்றாள் காயத்ரி.
"தெரில டா மா,அவன்கிட்ட வேணும்னா கேட்டு சொல்றேன்,பட் அவனோட பர்சனல் எல்லாம் சொல்லுவானானு தெரில" என்றாள் நர்கீஸ்.
"அக்கா, பொய் சொல்லாதீங்க, நேத்து நீங்க பேசின எல்லாத்தயும் நான் கேட்டேன், நான் தூங்கவே இல்ல. உண்மையை சொல்லுங்க" என்றாள் காயத்ரி.
"ஓ, உனக்கு தெரிஞ்சுருச்சா....அதான் எல்லாம் கேட்டுட்டியே அப்புறம் என்ன டா, இப்போ நீ ஹேப்பி தான, அதுக்கு தான் எல்லாம்" என்று சொன்னாள் நர்கீஸ்.
"இல்ல, என்ன நடந்ததுன்னு நீங்க தெளிவா சொல்லி தான் ஆகணும்" என்றாள் காயத்ரி.
"அது எதுக்கு இப்போ, அதான் முடிஞ்சுபோச்சே" என்றாள் நர்கீஸ்.
"ப்ளீஸ் அக்கா, சொல்லுங்க" என்றாள் காயத்ரி.
"இல்ல காயத்ரி....நான் சொல்லி அது அவனுக்கு தெரிஞ்சா என்னை கொன்னுடுவான், அது மட்டும் இல்ல, உன்கிட்ட சொல்ல கூடாதுனு ஸ்ட்ரிடா சொல்லிருக்கான், எல்லாத்துக்கும் மேல நீ நேத்து தூங்கலை, நாங்க பேசினதை எல்லாம் நீ கேட்டுட்டன்னு சொன்னாலும் நம்ப மாட்டான்" என்றாள் நர்கீஸ்.
"அக்கா, உங்களுக்கு எப்படி சமாளிக்கணும் னு தெரியும், ப்ளீஸ், சொல்லுங்க, என் அண்ணனை பத்தி நான் தெரிஞ்சுக்கணும், என் அண்ணனை நான் கஷ்டப்படுத்திட்டேன் அக்கா, ப்ளீஸ் சொல்லுங்க" என்றாள் காயத்ரி.
"என்ன காயத்ரி....விட மாட்டேன்ற" என்றாள் நர்கீஸ்.
"சொல்லுங்க ப்ளீஸ்"என்றாள் காயத்ரி.
"சொல்றேன்....உனக்கு ஒருநாள் பீவர்னு காலேஜ் பாதியிலேயே வந்தியா....அன்னிக்கு ரியாஸோட மதினா பஸ் ல வந்திருக்க, உனக்கு உடம்பு சரி இல்லன்னு கண்டக்டர் கிட்ட சொல்லிருக்க, அதுமட்டும் இல்ல, அன்னிக்கு ஈவினிங் காலேஜ் ல என்ன நடந்திருக்குன்னு விஜி பிரவீன்க்கிட்ட சொல்லிருக்கா, அதுக்கு அப்புறம் தான் விஜிக்கும் ப்ரவீனுக்கும் சின்ன மிசண்டர்ஸ்டேண்டிங் வந்திருக்கு, அதுல விஜி கோவமா இனிமே நீயோ உங்க டீமோ என்னையும் காயத்ரியையும் டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லிருக்கா, அதும் சென்டிமெண்டா லாக் பண்ணிருக்கா, நாங்க சந்தோஷமா இருக்கணும் னு நீங்க நெனச்சா எங்க கூட பேசாதீங்க, அப்போதான் நாங்க சந்தோஷமா இருப்போம் னு சொல்லிருக்கா, நேத்து பிரவீன் முகத்துல பாத்தியா இல்லையா நீ, வண்டில இருந்து கீழ விழுந்து முகத்துல கைல கால் ல எல்லாம் நல்லா சில்லறை வாங்கி இருக்கான், நைட் முபாரக் அண்ட் டீம் கிட்ட சொல்லிருக்கான், ஆனாலும் உன்னோட ப்ராப்ளேம் சால்வ் பண்ணனும், பேசத்தான் கூடாது, உதவி பண்ணலாம் இல்ல, அவனோட பிரென்ட் அப்துல்லாஹ் முகமது திருநெல்வேலி ல தான் போலீஸ் ல பெரிய போஸ்டிங்கில இருக்காரு, அவருகிட்ட ஆல்ரெடி அந்த லெக்ச்சரர் நம்பரை குடுத்து ட்ரேஸ் பண்ண சொல்லி இருந்தான் முபாரக். அவனோட அட்ரஸ், மத்த எல்லாம் டீடைல்ஸ் வந்ததும் இவங்க எல்லாரும் அந்த லெக்ச்சரர் வீட்டுக்கு போய் அங்க இருந்து அவங்க வீட்ல எல்லாரையும் போலீஸோட மிரட்டி அங்க இருந்து ரிசைன் பண்ணிட்டு இனிமே காயத்ரியை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன் னு அவகிட்ட மன்னிப்பு கேக்க சொல்லிட்டு வர சொல்லுன்னு அவங்க வீட்ல சொல்லி மெரட்டிருக்காங்க, அது மட்டும் இல்ல. எந்த காரணமும் சொல்லாம யாரு என்னன்னு எந்த விவரமும் சொல்லக்கூடாது....அப்டி சொன்னா அங்க காயத்ரிக்கு குடுத்த டார்ச்சரை இங்க உன்னோட தங்கச்சிக்கு கொடுப்போம் னு மிரட்டி இருக்காங்க, ஆனா இவங்க போன் ல பேசின எதுவும் அவங்க குடும்பத்துக்கு தெரியாது, அவங்க வீட்ல அந்த எந்த விஷயமும் சொல்லாம தான் மிரட்டி இருக்காங்க, அந்த நேரத்துல இங்க பிரவீன் அண்ட் ரியாஸ் அந்த லெக்ச்சரரை நேர்ல பாத்து மிரட்டி விட்டுட்டாங்க, அவனுக்கு எந்த வேலையும் கிடைக்கல, துண்டை காணும் துணிய காணும் னு ஓடிட்டான், ஓட வெச்சுட்டாங்க, நீ பிரச்சனைல இருந்து வெளில வந்துட்ட.நீயும் ஹேப்பி, அவங்களும் ஹேப்பி" என்றாள் நர்கீஸ்.
காயத்ரிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை."அக்கா, முபாரக் அண்ணாவை பாத்து பேசணும் அக்கா" என்றாள் காயத்ரி.
"கண்டிப்பா அவன் பேசமாட்டான், வீணா ட்ரை பண்ணாத, பிரவீன் சொல்ற வரைக்கும் உங்க ரெண்டுபேர் கிட்டயும் அந்த டீம் யாருமே பேசமாட்டாங்க, ஆனா உங்களுக்கு ஒண்ணுன்னா முன்னாடி வந்து நிப்பாங்க" என்றாள் நர்கீஸ்.
கார் வளவனூரை அடைந்தது, "எப்படி போகணும் காயத்ரி" என்றாள் நர்கீஸ்.
"ரைட் எடுங்க அக்கா, அந்த கோவிலுக்கு பக்கத்துல விட்ருங்க போதும்" என்றாள் காயத்ரி.
காயத்ரியை விட்டுவிட்டு, "ஏய் காயத்ரி....ப்ளீஸ் நான் உன்கிட்ட சொன்னதை விஜி கிட்ட ரம்யா கிட்ட சொல்லிடாத, நான் சொல்லிட்டேன் னு தெரிஞ்சா முபாரக் வில் கெட் ஆங்கிரி ஆன் மீ"என்றாள் நர்கீஸ்.
"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில அக்கா, என்னை சந்தோஷத்தின் உச்சத்துக்கு கொண்டுபோன அண்ணன் கிட்ட கூட என்னால பேச முடிலயே அக்கா, " என்றாள் காயத்ரி.
"டோன்ட் பீல், எல்லாம் சரி ஆய்டும், நல்லா படி" என்றாள் நர்கீஸ்.
"சரி அக்கா, பை" என்றாள் காயத்ரி.
"பை டா" என்றபடி காரை ரிவர்ஸ் எடுத்தாள் நர்கீஸ்.
பகுதி 35 முடிந்தது.
---------------தொடரும்--------------