என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 33
சற்று நேரத்தில் பிரவீன் வந்தான். வெளியில் நின்று கார் ஹாரனை அழுத்தினான். காயத்ரி தம்பியுடன் வெளியே வந்தாள். வெளியே வந்து கார் கதவை திறந்தான் பிரவீன்.
"அண்ணா எப்படி இருக்கீங்க" என்றால் காயத்ரி.
"ஓகே" என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு காயத்ரி தன்னிடம் ஏதும் பேசிவிட கூடாது என்பதற்காக பாடல் போட்டு சத்தம் வைத்துக்கொண்டான். கார் மெதுவாக கிளம்பி விழுப்புரம் நோக்கி சென்றது. காயத்ரிக்கு பிரவீன் அமைதியாய் வருவது என்னவோ போல் இருந்தது. ஆனாலும் அவளும் ஏதும் பேசாமல் வந்தாள்.அந்நேரம் விஜியின் போன் வந்தது.
"சொல்லு விஜி" என்றாள் காயத்ரி.
"என்ன டி, பாட்டு சத்தம் இவ்ளோ அதிகமா இருக்கு, எங்க இருக்க" என்றாள் விஜி.
"இல்ல டி, தம்பி டிவி பாக்கறான், டேய் சவுண்டு கம்மி பண்ணு டா" என்று தம்பியிடம் சொல்வது போல பாவலா காட்டினாள். பிரவீன் சத்தத்தை குறைத்தான்.
"சொல்லு விஜி, எப்படி இருக்க, ரம்யா என்ன பண்ரா" என்றாள் காயத்ரி.
"ஏய், யாரவது உனக்கு கால் பண்ணாங்களா மெசேஜ் பண்ணாங்களா" என்றாள் விஜி.
"இ.....இல்ல டி" என்றாள் காயத்ரி.
"பாத்தியா, ஜஸ்ட் ஒருவாட்டி ஹார்ஷா பேசினா போதும், இவங்க எல்லாரும் அவங்க சுயரூபம் என்னன்னு காட்டிடுவாங்க, வீட்ல இருந்துகிட்டே வேற ஆள் கிட்ட போன் குடுத்து பேச சொல்லிருக்காங்க , நல்லா யோசிச்சு பாரு, யாரவது என்ன வேலையா போனாலும் ஒரு போன் இல்லாம வெளில போவாங்களா" என்றாள் விஜி.
"ஆ....ஆமாம் டி, நீ சொல்றது சரி தான்" என்றாள் விஜி.
"ஏய்...என்ன ஆச்சு, நீ நார்லமலா பேசற மாதிரி தேரிலேயே, இன்னும் உனக்கு பீவர் இருக்கா, வேணும்னா எங்க வீட்டுக்கு போ, நான் அம்மா கிட்ட சொல்றேன்" என்றாள் விஜி.
"இல்ல விஜி, ஆல்ரெடி இட்லி வெச்சுட்டேன்" என்றாள் காயத்ரி.
"சரி டீ, பாத்துக்கோ, இந்த டேவிட் தான் ரொம்ப ஐ லவ் யு மெசேஜ் போட்டு உயிரை எடுக்கறான்" என்றாள் விஜி.
"அவன் ப்ரபோஸ் பண்ணினா நீயும் ஐ லவ் யு சொல்லிட வேண்டிது தான" என்றாள் காயத்ரி.
இந்த வாக்கியத்தை சொன்னதும் காரை வேகமாக ஒட்டிக்கொண்டிருந்த பிரவீன் ஒரு கணம் சடன் பிரேக் போட்டு நிறுத்தினான். போன் கீழே விழுந்தது. போனை எடுத்து கையில் வைத்து மைக் இருக்கும் இடத்தை கையால் மூடியபடி "என்ன ஆச்சு அண்ணா" என்றாள் காயத்ரி.
"ம்ம்ம்....என்ன.......ஒண்ணும் இல்ல, டக்குனு கண்ணு கட்டிருச்சு" சமாளித்தான் பிரவீன்.
கார் மீண்டும் ஓடத்தொடங்கியது.
"சொல்லு விஜி" என்றாள் காயத்ரி.
"என்ன டி என்ன ஆச்சு" என்றாள் விஜி.
"இல்ல, சார்ஜ் கம்மி ஆயிருச்சு" என்றாள் காயத்ரி.
"சரி,நான் அப்புறம் பேசறேன் டி" என்றபடி போனை வைத்தால் விஜி.
"அண்ணா...எதுக்கு காரை அப்டி சடனா நிறுத்தினீங்க?" என்றாள் காயத்ரி.
"நத்திங்" என்றபடி சத்தத்தை வேகமாக வைத்தான்.
பேச விருப்பம் இல்லை என்று காயத்ரி புரிந்துகொண்டாள்.
கார் நேராக அர்ச்சனா இன் வாசலில் வந்து நின்றது.
நர்கீஸ் "ஹாய் காயத்ரி...வா வா....வாடா தம்பி" என்று அவளையும் அவளது தம்பியையும் வரவேற்றாள் நர்கீஸ்.
"எப்படி இருக்கீங்க அக்கா" என்றாள் காயத்ரி.
"நல்லா இருக்கேன் காயத்ரி, டேய்...வா டா பிரவீன்" என்றாள் நர்கீஸ்.
"ம்ம், தோ வரேன்" என்றான் பிரவீன். அனால் அவர்களின் அருகில் வரவே இல்லை.முபாரக் இதை புரிந்துகொண்டு "ஒரு நிமிஷம், தோ வரேன்" என்று சொல்லிவிட்டு பிரவீனிடம் சென்று பேசினான்.
"என்ன டா, அங்க வா, சாப்பிடலாம்" என்றான் முபாரக்.
"இல்ல டா, வேணாம்" என்றான் பிரவீன்.
"இல்ல டா, நர்கீஸ் உனக்காக வீடு சாப்பாடு தான் எடுத்துட்டு வந்திருக்கா" என்றான் முபாரக்.
"பசிக்கல விடு. நான் வெளில கார் ல வெய்ட் பண்றேன், நீ முடிச்சுட்டு வா, ஒண்ணும் அவசரம் இல்ல, டேக் யுவர் டைம்" என்றான் பிரவீன்.
"பிரவீன், எல்லாரும் புரிஞ்சுக்கற மாதிரி பிஹேவ் பண்ணாத, எனக்கு புரியுது உன் மனசு ரொம்ப கஷ்டப்படுதுன்னு, அவங்களா புரிஞ்சுப்பாங்க டா, அதுவரைக்கும் நீ அமைதியா தான் இருக்கணும்" என்றான் முபாரக்.
"அதெல்லாம் இல்ல டா, மனசு சரி இல்ல, நான் உன்ன மாதிரி மெச்சூர்டான நடந்துக்க மாட்டேன், எல்லாருக்கும் மனசு கஷ்டமாகும், என் கஷ்டம் என்னோட போகட்டும்" என்றான் பிரவீன்.
"என்ன டா, உனக்கு மட்டும் தான் கஷ்டம் னு பேசற, எனக்கு இல்லையா, உனக்கு உன் கஷ்டம் மட்டும் தான், எனக்கு......நீ கஷ்டப்படறியே ன்னு ரெண்டு பங்கு கஷ்டம் டா, பேசாம வா" என்றான் முபாரக்.
"இல்ல டா, வேணாம், விடேன் என்னை" என்றபடி காருக்கு போய்விட்டான் பிரவீன்.
"ஏன், பிரவீன் எங்க போறான்" என்றாள் நர்கீஸ்.
"ம்ம்ம்ம்?????காரை பார்க் பண்ண போறான், வந்துருவான்" சமாளித்தான் முபாரக்.
"எப்படி காயத்ரி இருக்க" என்றான் முபாரக்.
"நல்லா இருக்கேன் அண்ணா, நீங்க?" என்றாள் காயத்ரி.
"ம்ம்ம், அல் ஹம்துலில்லா, நல்லா இருக்கேன் மா.....ஒரு நிமிஷம், தோ வந்துடறேன்" என்று அவனும் எழுந்து போனான்.
நர்கீஸுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. "ம்ம்ம், சரி, நீ சொல்லு காயத்ரி, விஜி ரம்யா எல்லாரும் நல்லா இருக்காங்களா? இவங்க எப்பவும் இப்டி தான், அடுத்தவங்க பிரச்சனையை தான் தல்ல போட்டுக்கிட்டு பிஸியாவே இருப்பானுங்க" என்றாள் நர்கீஸ்.
"எல்லாரும் நல்லா இருக்காங்க அக்கா, விஜி ரம்யா கடலூர் போயிருக்காங்க" என்றாள் காயத்ரி.
நீண்ட நேரம் ஆகியும் முபாரக் வரவே இல்லை, அவனுக்கு போன் செய்தாள் நர்கீஸ்.
"தோ வரேன்" என்று உடனே கட் செய்தான் முபாரக். ஆனால் வரவில்லை.
நீண்ட நேரம் வராததால் பில்லை கட்டிவிட்டு நர்கீஸ் காயத்ரி மற்றும் அவளது தம்பியுடன் வெளியே வந்தாள்.
"என்ன முபாரக்.....உள்ள வரவே இல்ல நீ, பிரவீன் எங்க, கார் எங்க" என்றாள் நர்கீஸ்.
"தெரில, நான் வந்ததுல இருந்து பிரவீனை காணும் காரும் இல்ல, போன் பண்ணினா கட் பன்றான், ஒண்ணுமே புரியல" என்றான் முபாரக்.
"என்ன முபாரக் சொல்ற, இன்னொருவாட்டி ட்ரை பண்ணு" என்றாள் நர்கீஸ்.
"பத்து வாட்டிக்கு மேல பண்ணிட்டேன் நர்கீஸ், எடுக்க மாற்றான், நான் போன் பண்ணினா என்ன பிசியா இருந்தாலும் எடுத்து பேசிடுவான், பயமா இருக்கு" என்றான் முபாரக், அவனது கண்கள் கலங்கிய விட்டன.
முபாரக் கண்கள் கண்ணீர் விட்டு இன்று தான் பார்க்கிறாள் நர்கீஸ்.
"டேய், என்ன டா, நீயே அழறியா" என்றாள் நர்கீஸ்.
"வேற என்ன டி பண்ண சொல்ற, பாவம் எங்க பிரவீன், என்னன்னு தெரில, அவன் இருந்த டெங்ஷன்ல எங்கயாவது வண்டில போய் மோதிட்டானா ஐந்தாவது ஆயிருச்சானு தெரில" என்றான் முபாரக்.
"ச்சீ ச்சீ....அப்டி எல்லாம் நெகட்டிவா பேசாத, ஈஷா அல்லாஹ் அவனுக்கு ஒண்ணும் ஆயிருக்காது, வெய்ட் பண்ணு டென் மினிட்ஸ் ல அவனே வருவான் பாரு" என்றாள் நர்கீஸ்.
காயத்ரிக்கு இருப்பு கொள்ளவில்லை."ப்ரவீனுக்கு ஏதாவது ஆச்சுன்னா கண்டிப்பா விஜி தான் காரணம்" என்று நினைத்துக்கொண்டாள். விஜிக்கு சொல்ல வேண்டும் என்று இருந்தது. ஆனால் அவள் கோவித்துக்கொள்வாள் என்பதற்காக சொல்லாமல் தவித்தாள்.
அரைமணி நேரம் ஆனது, பிரவீன் வரவே இல்லை. முபாரக் செய்வதறியாது நின்றான்.வேறு வழி இல்லை, ரியாஸுக்கு போன் செய்தான்."டேய், எங்க டா இருக்க" என்றான் முபாரக்.
"லைன் ல இருக்கேன் டா, நம்ம பாண்டி விழுப்புரம்வி வண்டி ல. என்ன டா, பதட்டமா பேசற?" என்றான் ரியாஸ்.
"இப்போ கரெக்ட்டா எங்க இருக்க டா, பாடி போறியா விழுப்புரம் வரியா" என்றான் முபாரக்.
"ஏன் டா, என்ன டா, சொல்லு" என்றான் ரியாஸ்.
"எங்க போறான்னு சொல்லி தொலை டா" என்றான் முபாரக்.
"டேய், என்ன டா, ஏதோ பிரச்சனை ல இருக்க போல இருக்கு, ராகவன் பேட்டை தாண்டி விழுப்புரம் வந்துட்டு இருக்கேன் டா" என்றான் ரியாஸ்.
"டேய், பஸ் ஸ்டான்ட் வந்ததும் ஆப்போசிட்ல அர்ச்சனா வாசலுக்கு வா, நான் அங்க நிக்கறேன்" என்றான் முபாரக்.
"சரி டா" என்றான் ரியாஸ்.
பத்து நிமிடத்தில் ரியாஸ் வந்தான், "என்ன டா, டென்க்ஷனா இருக்க, என்ன ஆச்சு, எதுக்கு டா அழற" என்று பயத்தின் உச்சத்தில் கேட்டான் ரியாஸ்.
"டேய், பிரவீன் எங்க இருக்கான் னு தெரில டா, கார எடுத்துட்டு போனான், அவன் நார்மலாவே இல்ல டா, எங்க போனான் னு தெரில டா, மச்சான் சாத்தியமா பயமா இருக்கு டா, கால் பண்ணிட்டு இருக்கேன், எடுக்கவே மாற்றான் டா, ஆரம்பத்துல கட் பண்ணிட்டு இருந்தான், இப்போ முழு ரிங் போய் கட் ஆகுது டா. அவனுக்கு ஒண்ணும் ஆயிர கூடாது டா, அவனுக்கு ஒண்ணும் இல்லாம வந்துட்டான் னா நான் அந்த கார வித்து அந்த பணத்தை லெனின் ஆஸ்ரமத்துக்கு குடுத்துடறேன், இது இறைவனுக்கு காணிக்கை" என்றான் முபாரக்.
ஆடிப்போனாள் காயத்ரி. பாசத்தின் அளவை அவளால் உணர முடிந்தது.
நேரம் ஒன்பதரை ஆனது....ஆனால் பிரவீன் வரவே இல்லை. அவனது போனும் ஸ்விச் ஆப் ஆனது....
பகுதி 33 முடிந்தது.
-----------தொடரும்--------------