அமைதி

எவ்வளவு வார்த்தைகள்
பேசினாலும்,
பேசாமல் கொள்ளும்
உன் பார்வை பேசுகிறது
அன்பே ஆயிரம் வார்த்தைகள்!!
திட்டி முறைத்தாலும்
திட்டாமல் பார்க்கும் பார்வை,
கொடுமையானது!!
கடுமையாக திட்டும்
அப்பாவின் வார்த்தைகளைவிட,
திட்டாமல் நகரும்
நண்பனின் மௌனம்
கொடுமையானது!!!
கடும் பேச்சுக்கள்,
சொல்லாத சொற்களை கூட
அரை நிமிட அமைதி
ஆணித்தரமாக சொல்லிவிடும்
அமைதியே வலிமை என்று!!