தவறவிட்டவன்

ஆண் ஒன்றும்
பெண் ஒன்றுமாய்
இரு உருவங்கள் இணைந்து ,
காதலில் திழைத்து
காமத்தில் கலந்தாட,
அவன் உயிரின் எச்சத்தை
அவள் வயிற்றில்
ஊற்றிட,
ஒன்பது திங்கள்
தன் அகத்திற்குள்
அடைகாத்தாள்
கருவாய்......

கடைசி திங்களில்
ஒரு நாள்,
அவளின்
நரம்புகள் புடைக்க
உடலில் நாளங்கள்
முறுக்கேற,
இரத்தமும் அழுகையுமாய்
வெளியே வந்து விழுந்தது
ஓர் உயிர்...

மரணத்தின் விழும்பில்
நின்றிருந்தவளை
கரம் பிடித்து இழுத்து
வந்தது அவள்
பிள்ளையின் அழுகை....

தன் உதிரத்தின்
மிச்சத்தை பாலாக்க
அவளின் வெள்ளை
ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தான்
அவள் மகன்...

வளர்பிறையாய் வளர்ந்தான்
பிள்ளை...
படிப்பை காலால்
உதைத்து எரிந்தான் ,
தீயதை தன் தோளோடு
அணைத்துக் கொண்டு
திரிந்தான்...

வேர்வை கடலில் மூழ்கி,
உடல் நோக
தன் அப்பன்
உழைத்து எடுத்த
பணத்தை எல்லாம்
குடியில் கரைத்து
இன்பத்தில் திழைத்து
அவன் வாழ...

தன் உயிரின் மிச்சத்தை
தந்தவனும்
தன் உதிரத்தை பாலாக்கி
கொடுத்தவளும்
தேய் பிறை என தேய்ந்தனர்,

இருமாப்புடன் அலைந்த தேகம்
அத்தோடு நில்லாமல்,
காமத்தின் வெறி கொண்டு
தேர் ஏறி வீதி உலா போக,
இறுதியில்
வீட்டிற்க்கு திரும்பி வந்தான்
தீரா பிணியை போர்த்திக்கொண்டு....

கண்கள் பொங்க
முதுகு வளைந்திட
கால்கள் நடுநடுங்க
கீழே சரிந்தவனை ,
தேய்ந்த தேகம்
இரண்டு வாஞ்சையோடு
தாங்கி பிடிக்க,
மாரிலும் தோளிலும்
போட்டு வளர்த்த பிள்ளை
இங்கே,
கைகள் சூம்பிப் போக,
உடல் எங்கும் கீறலாய்
சுருண்டு கிடந்தான்
அன்னையின் மடியில்...

பளு இழந்த தேகத்தோடு
மனைவி மகனை
அனணத்த தகப்பன்
கதறி அழுதான்
எம தூதர்களிடம்.....

கரையாத மனதுடன்
அந்த மகனின்
உயிரை உடலில்
இருந்து உருகியவர்கள்
சொன்னது
"வாழ்வியல்
நெறியை தவறியவன் "

எழுதியவர் : மதிமகள் (16-Sep-17, 11:59 am)
பார்வை : 273

மேலே