இனியவன்சென்ரியூ கள்
----------------------
கவிப்புயல் இனியவன்சென்ரியூ கள்
-----------------------
தேர் திருவிழா
தேர்தல் திருவிழா
திருடர்கள் ஜாக்கிரதை
^^^
பரிணாம வளர்ச்சி உண்மை
அடிக்கடி தாவுகிறார்
கட்சி தலைவர்
^^^
தேர்தலுக்குமுன் நியதி
தேர்தலுக்கு பின் மறதி
தேர்தல் வாக்குறுதி
^^^
திறந்த வீட்டுக்குள் நுழைந்தது
வோட்டு கேட்டு வீட்டுக்குள்
வேட்பாளர்