உன்னுடன் உரசி வாழனும்

உன் நெற்றியின் மீது பதிந்த சந்தனம்
என் நெற்றிவாக்கில் உயிர்பெறும் நேரம்

உன் இருபுருவம் விட்டு சென்ற கண்களை
என் மீது போர்த்தியதாய் ஏதோ ஓர் மயக்கம்

உன் இருமையும் இணைந்து போராடும் பெருமூச்சி சூழல்
என் மீது தென்றலாய் வீசுவதாய் உணர்கிறன்

உன் இதழ்கள் இணைந்து பேசும் நேரங்களில் - அந்த இதழ்
என் இதழுடன் இணைந்து பேசதா என்று ஏங்கிய காலமுண்டு

உன் கண்ணத்தில் விழும் குழிபோரில்
நானும் விழுந்து மாய்க்கவே துடிக்கிறேன்

உன் கழுத்து மணிவாக்கில்
மடிப்பு வரிகளாய் மயங்கிபோகிறேன்

நீ அடிக்கடி உடுத்தும்
கருப்பு சட்டையை - இப்போது நானும்
காதல் செய்ய ஆரம்பித்து விடுவேன் போல

உன் விரல்களுக்கு இடையில் விடும்
இடைவெளியை நிரப்ப
என் விரல்கள் கோர்க்க போராடுகிறேன்

ஆணு அசைப்போடும் - உன்
நடையை தினம் தினம்
வீட்டில் நடைபயிலுகிறேன்

திமிருக்கும் செருக்குக்கும்
பிறந்த உன்னுடன் - ஒருமுறையாவது
வாழ முடியாத - என்று
என் பிறப்பையே
வெறுக்கிறேன்

எழுதியவர் : பாக்கியலட்சுமி தமிழ் (16-Sep-17, 7:47 pm)
பார்வை : 147

மேலே