வீழ்ந்து விடுமா என் பாரதம்

என்ன தவம் செய்தோம்
மானிடராய் பிறக்க !
அதில் எவர் விடம் வைத்தார்?
மானிடரை கெடுக்க....

ஆள்பவன் அரசன்
வீழ்பவன் ஆண்டி,
ஆண்டி அரசனாகிறான்
தீய வழியில்...
அரசன் நொண்டியாகிறான்
வரும் வழியில்

'என்னடா பாரதம் '
ஏளனம் செய்வோர் பலர்...

இது என் பாரதம்
தோளை நிமிர்த்துவோர் சிலர்......

எறும்பு அமைக்கிறது புற்று
பிற உயிர்களுக்கு,

மனது நினைக்கிறதா?
உன் பாரதம் உனக்கு....

காரணம் சுய வெறி
நீக்கிடு நிற வெறி

வாழ்வோம் நன்னெறி
உயரும் நம் நாடு நல்லரசாகி.....

எழுதியவர் : பிரபாகரன் (17-Sep-17, 4:38 pm)
பார்வை : 281

மேலே