"நதியோட்டம்...2"
மலையிலே உயிரூட்டப்பட்டு
அருவியிலே தாலட்டப்பட்டு,
மூலிகையினால் வாசமுற்று,
நதியாய் நல்வழியாகையில்,
மனிதர்களின் சதியினால்
கவனிபாரற்ற அனாதையாய்,
நிலத்திற்கும் தன்வளதிற்கும்
கூலிக்கு உழைக்கும்,
குழந்தை தொழிலாளியாய்
தாகம் தீர்க்க தரித்தாயோ,
கடல் கணவனுடன் கலக்கும்முன்
களவாடபட்டதேன் கயவர்களால்...!!!