பெண் அவள்
சாலை யோரம்நான் நடக்க யினிலே
சிலுசிலு வென ஈரக்காற் றோடுசேர்ந்த மழைச்சாரலில் சிலிர்த்ததோர் எந்தன் தேகமே..
பெருமிதம் கொண்டுசற்று
நனைந்த படிநான் கடக்கும்
தருணமதில் கண்ட காட்சியது..
கன்னியவள் கண் முன்னெதிரே ஒய்யாரம் ஆகநடந்து ஓரிரு
நொடிகள் கண்ஜாடை காட்டும் போது குளிர்ந்ததோ உந்தன் நெஞ்சு..
ஆடவன் எவனோ அப்படித்தான்
பார்ப் பவனாவான் எனில் கண்விழி
யில்லை பிழை அணியும்
ஆடை சீரற்ற தென பொருள்..
தாய்தந்தைக் குத்தான் சிறுபிள்ளை ஆயினும்வய தில்வரம் புண்டு..
எல்லைகள் தாண்டும்நட் போகாதலோ
தொல்லை கள்சேர்க்கு மென்பதில்
தெளிவுறாதது தான்வே தனை..
பிறார் நோக்கா விடில்
பெண்ணல்ல அழகென இல்லையடி பிறர்மனம் நோகா பேச்சும்நற்
பண்புக ளேஅழகு...