மழை சொல்லும் ரகசியம்
அவசர கதி உலகத்தில் அவசரமின்றி கொட்டும் மழை.
ஆயிரம் அட்டவணைகளை கன நேரத்தில் கலைத்து விட்டு அவசரமின்றி கொட்டும் மழை.
பள்ளி குழந்தைகளின் முகம் மலரச் செய்து அவசரமின்றி கொட்டும் மழை..
கடலோடிகளை கடல் அன்னையின் மடியில் தவழ விடாமல் அவசரமின்றி கொட்டும் மழை.
மொட்டைமாடி துணிகளை நனைய வைத்து வீட்டு பெண்களிடம் வசை வாங்கி அவசரமின்றி கொட்டும் மழை.
பல மதத்தினரை ஒரே இடத்தில் நனையாமல் ஒதுங்க வைத்து அவசரமின்றி கொட்டும் மழை.
வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை சொல்லாமல் சொல்லி கொண்டே அவசரமின்றி கொட்டும் மழை.