அட என் தேவதைக்காரி

மாலை நேர குளிர்காற்று !
மழையின் தூறல் மிதமாய் !
மண்வாசமும் மிகையாய் !

" அதே டீக்கடை "

சூடான தேனீர் அருந்தியபடி
தேனீரின் தித்திப்பில் என் நா இனிக்க !
தேவதை உன் நினைப்பில் என் இதயம் இனிக்க !
இநேரத்திலா இப்பக்கம் வரப்போகிறாள் ?

இந்த இதயத்திற்கு வேறு வேலையே கிடையாது
நினைக்கும்போதெல்லாம் அவள் வரவேண்டும் என
ஆசையில் அடம்பிடிப்பது !


குடையை தாழ்த்தி பிடித்து
வருபவள் யார் இவள் ?

அட ! என் தேவதைக்காரி !

மழைக்கு உன் தேகம் தீண்ட வேண்டும்
எனும் ஆசை !

என் மனதிற்கு உன் முகம் பார்க்க
வேண்டும் என ஆசை !

வருண பகவான் தான் இருவருக்குமே
கருணை காட்டினார் !

குடை பறக்க !

மழையின் ஆசையும் -என் மனதின் ஆசையும்
அப்பொழுதில் நிறைவேறியது !

எழுதியவர் : முபா (18-Sep-17, 7:38 pm)
பார்வை : 695

மேலே