மழலை மனம்

நடக்காதே
குதிக்காதே
ஓடாதே
ஆடாதே
ஒழுங்காய் ஒரே இடத்தில
அசையாமல்
அமர்ந்திரு என
உயிருள்ள குழந்தையைக்
கண்டித்தாள் அம்மா
சாப்பிடு
தூங்கு
படி, எழுது
ஓடு - என
உயிரற்ற பொம்மையை
உயிர்ப்பித்துக் கொண்டிருந்தது
குழந்தை.