காதல்

புள்ளியிலிருந்து
வரையப்பட்ட கோடு போல
தொடங்குகிறேன்
புள்ளி - காதல்

நேற்று வரை
ஒதுக்கிவைக்கப்பட்டவொன்று
ஒத்திகை பார்க்கிறது
இருபதிலும்
அறுபதிலும்
காதல் முதலில்
வெட்கத்தைத் தான்
தருகிறது

உன்னைப் பாா்த்தேன்
உறங்கிக் கிடந்த
உணர்வுகளெல்லாம்
முத்தமிட்டுக் கொண்டன
இமைகளைப் போல

உடைந்த கண்ணாடியின்
ஓவ்வொரு சில்லிலும்
முகம் தெரிவது போல
பார்க்கிறவாா்களெல்லாம்
நீயாகத் தான் தொிகிறாய்…

சாியென்று சொல்
பெண்ணே
இத்தனை காலமாய்
இறுக்கி வைத்த காதல்
புது வௌ்ளம் போல்
கரைபுரண்டு ஓடும்
நீந்தலாம் நீ

சம்மதம் சொல்
உயிர் உருக உருக
காதலிக்க
உனக்காக
காத்திருக்கிறேன்

நேற்று வரை
முகத்தின் இரண்டு கண்கள்
இன்று முதல்
ஒரு கண்ணின் இமைகளாய்
முத்தமிட்டுக் கொள்வோம்
வா........

எழுதியவர் : வீரத்தமிழன் (20-Sep-17, 10:05 pm)
Tanglish : kaadhal
பார்வை : 211

மேலே