வேய்ங்குழலின் பயணம்

ஒரு இலக்கியப் பயணத்திற்கான மகிழ்வில்
கற்பனையைத் தொலைத்துவிட்டு
தொடங்கியது என் பயணம்
சாரதியில்லாத தேரைப்போல………..

அகம் புறம்
ஆன்மீகம் அறிவியல்
நீதி வானவியல்
இலக்கணம்-என
விரிந்து கிடந்தது உலகம்

அதில்
கரையில் நின்று கொண்டு
கடலின் எல்லையை
வரையறுத்துக்
கொண்டுருக்கிறேன்.

புறத்தில் புறப்பட்டு
அகத்தில் அகப்பட்டு
கனவு சிறகு விரித்து
காதல் குடையுடன்
கண்ணாதாசன் கை பிடித்து
வைரமுத்துவோடு
வலம் வரும் போது
வார்த்தைகளின் விசாரிப்பில்
தெரிந்தது
கற்பனையை மறந்தது

தன்னிடம் இல்லாத ஒன்றைத் தேட
இருக்கின்ற ஒன்றை விட்டுப்
புறப்பட்டு விட்டேன்

கனவுக் காதலியைத் தேடும் போது
எதிப்படுபவள் எல்லாம்
காதலியாகத்தான் தெரியும்

அங்கே
போா்க்களத்தில்
வாளிழந்த மன்னனாக அல்ல
வாளே கொண்டு செல்லாத
மன்னனாக நிற்கிறேன்
கடலில் மீன் பிடிக்க வலையை
தொலைத்து விட்;டுச் சென்றவன்

கடற்கரையில் தொலைத்த
மூக்குத்தியைத் தேடி
புறப்பட்டு விட்டேன்

கண்டு பிடித்தே தீருவேன்-வீரம்
கடற்கரை மணலில் காண முடியுமா - விவேகம்
இவை இரண்டையும் முந்திச் செல்கிறது
என் தன்னம்பிக்கை
இன்று…

முன்னுரை எழுதுவதற்குக் கூட
சில இலக்கியத்தின் முந்தானையைப்
பிடிக்க வேண்டியுள்ளது

(பயணங்கள் முடிவதில்லை)

எழுதியவர் : (20-Sep-17, 10:12 pm)
பார்வை : 53

மேலே