வாழ்த்து
முற்றத்துத் திருவிழா முத்தான ஆண்டுவிழா
கற்றவர்கள் கூடுவரே கவிதைகளைப் பேசுவரே .
பெற்றிடலாம் இன்பமுமே பெரும்பேறு அடைவோமே
வெற்றிகளைப் பெற்றவர்கள் வேட்கையுடன் விருதுகளை
உற்றவர்கள் உறவோர்கள் உன்னதமாய் சூழ்ந்திருக்கப்
பற்றிடலாம் வாருங்கள் பண்புடனே அழைக்கின்றேன் !