பிரார்த்தனை
ஆயிரம் ஆயிரம் கனவுகள் விழிகளில் வண்ணமிட
வண்ண வண்ணமாய் எண்ணங்கள் சூழ்ந்திட
சூழ்நிலைகள் அதட்டலாய் சுற்றிவர
சுற்றும் உலகில் உயர்வாய் வாழ எண்ணம்
எண்ணங்களில் சிறந்தவை சிகரத்தில் ஏற்ற
ஏற்றி விட்டவரை ஏளனமாய் பாராமல்
பார்வையில் பலநூறு கொள்கைகளை சேர்த்து
சேர்த்தவைகளை தினம் செயலாக்கி
செயலில் ஊக்கத்தை துணை நிறுத்தி
நிற்பவை நிலையாய் நிற்க உழைப்பை
உளியாக்கி ஊண் உறக்கம் விலையாக்கி
வாழ்வில் வசந்தம் கைகோர்க்க
அனுதினமும் இறைவனை பிரார்த்திக்கிறேன் …