தாயே உனக்காக

தாயே உனக்காக
.-.-.-.-.-,-.-.-.-.-.-.-.-.-
தாய் போல அன்பு கொள்ள
தாயை தாண்டி உறவில்லை...!!!!

சொல்லில் அடங்கா
தியாகம் தந்தவளே சுமை என நான் நினைக்கவில்லை..!!!

எனை சுமந்த சுமைதாங்கி நீ
உனை தாங்க எனக்கென்ன பாரம்
உனை தாங்கும் தாயாகவே
நானிருப்பேன்...!!!!

கடல் தாண்டியதும் உனக்காக
கண் கடக்கும் கண்ணீரும் உனக்காக...!!!

உடலும் உயிரும் நீ தந்தது
உனக்கென உடல் வருத்துவதிலும்
உயிர் கொடுப்பதிலும்
எனக்கென்ன தயக்கம் தாயே...!!!!
🌹💐🌹💐Samsu💐🌹💐🌹

எழுதியவர் : samsu (23-Sep-17, 11:49 pm)
Tanglish : thaayaye unakaaga
பார்வை : 3939

மேலே