பாடல் - பழைய ராகம் - புதிய பாடல்

பாடல் -- பழைய ராகம் - புதிய பாடல்

பல்லவி :-

அம்மாவே ஒன்ன காணாத உள்ளம் கண்ணீரில் தான்வாடுது /
அம்மாவே ஒன்ன காணாத உள்ளம் கண்ணீரில் தான்வாடுது /
அம்மாவே ஒன்ன காணாத உள்ளம் கண்ணீரில் தான்வாடுது /
அம்மாவே ஒன்ன காணாத உள்ளம் கண்ணீரில் தான்வாடுது /
விதியாகிப் போச்சு விரைவாகிப்போக விழியாலே ஒன்னத் தேடுது /

( அம்மாவே ஒன்ன காணாத உள்ளம் கண்ணீரில் தான்வாடுது / )

சரணம் - ஒன்று

மண்ணுக்கொரு மகராசி மகளுக்கொரு மாதாவே /
சிந்தைக்கொரு சிற்பமுமே நீதானம்மா /
மண்ணுக்கொரு மகராசி மகளுக்கொரு மாதாவே /
சிந்தைக்கொரு சிற்பமுமே நீதானம்மா /
வித்தை பலவும் விந்தை நீயே /
தங்கும் நெஞ்சில் எந்தன் தாயே /
நித்தம் எனை சித்தம் எனும் அன்னைநீ /
நானிங்கு ஏனோ நலமாக இல்லை /
நீதானே அம்மா நான் தொழும் தெய்வம் /
இனியிங்கு மீண்டும் வா வா அம்மா /

( அம்மாவே ஒன்ன காணாத உள்ளம் கண்ணீரில் தான்வாடுது /)

சரணம் - இரண்டு :-

என்னை ஒரு மகளுமென என்றும் ஒரு செல்வம் யென /
எனக்கும் ஒரு வாழும் வழி சொன்னால் என்ன /
என்னை ஒரு மகளுமென என்றும் ஒரு செல்வம் யென /
எனக்கும் ஒரு வாழும் வழி சொன்னால் என்ன /
அன்னை உறவோ அன்பின் மலரோ /
உந்தன் மகளோ உறவின் நிகரோ /
பந்தத்துடன் பாசத்துடன் சிந்தித்திட /
அம்மாவே நீதானே இல்லாத வாழ்வும் /
மண்மீது நானும் வாழ்ந்தென்ன லாபம் /
ஏங்காதோ நெஞ்சம் போதும் போதும் /

( அம்மாவே ஒன்ன காணாத உள்ளம் கண்ணீரில் தான்வாடுது / )

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Sep-17, 12:00 pm)
பார்வை : 132

மேலே