முத்தம்மா நீ என் மோனாலிசா
அவள் சிரித்தாள்
ஷெல்லியும் கீட்சும்
இல்லாத குறையை
தீர்த்து வைத்தேன்
என் கவிதையில்
முத்தம்மா
நீ என் மோனாலிசா
என்றேன்
மேலும் சிரித்தாள்
சிரித்தவாறே என்னுடன்
செல் ஃபி எடுத்துக் கொண்டாள்
செல் ஃபி இருக்க
ஷெல்லியும் கீட்சும்
எதற்கு என்று சிரித்தாள் !