ஆசிரியர்க்கு
வெண்பா
உண்டிக் கொடுத்தோர் உயிரைக் கொடுத்தோராம்
கண்ணானக் கல்விதந்தார் தெய்வமாம் --- கண்டாக
வெண்பாப் புனைவது மென்னவுமக் குப்புதிதா
தண்ணெனத் துள்ளியதுள் ளம்
செந்தமிழில் கற்றாய் நிறைவாய் பலதுமே
நந்தமிழ் விட்டாங்கி லம்கற்றாய் --- விந்தையே
செல்லியுடன் கீட்ஸ்மில்டன் எல்லாம்கற் பித்தெம்மை
செல்லமுடன் கண்டீர்யெம் மை
வாழிய வாழிய வாழியவே சுப்ரமணியனார் வாழியவே!
--- ராஜ பழம் நீ (24-Sep-2017)