கற்பழிப்பு வழக்காம்

(சந்தக்கலித்துறை)

பெண்ணொருவளை காமாந்தகர் கூட்டாய்க்கெடுத் தாராம்
எண்ணற்றநா ளேட்டிலும்படம் எண்ணமின்றிபோட் டாரு
அண்மைத்தொலைக் காட்சியும்வர எதிரிக்கெதிர் ஊத
தண்டனையடை வதுநிச்சயம் என்பதுநினைப் பாகும்

தீர்க்கப்படா திருத்தப்படா நிகழ்வாஇது கூறு
தீர்க்கமுடியா தொடர்கதையிது ஒன்றன்பிற கொன்று
யார்க்குமக்கறை யார்க்குமேயிலை வெட்கமற்றவர்க் கூற்று
தீர்க்கவோர்கொடுஞ் சட்டமாயினும் திருத்தினாரிலைக் கேளு

ஆசிரியப்பா
படமெடு படம்காட்டு பயனிலை எடுபடா
பாட்டெழு தத்துயர் ஓட்டுவர் யாராம்
முதலில் முதல்மந் திரிமா நாட்டிலே
மொத்தக் குரலும் சத்தமாய்க் கொடுத்து
முடிக்கவேண் டுமிதை முதல்வழக் கெனச்சொல்
மெக்கா லேச்சட்டம் பக்கா ஒட் டை
மெச்ச முடியா மெக்கா லேவை
திருத்துக திருத்துக இன்றேத் திருத்துக
வென்றுக் குரல்தர வேண்டும்
இன்றிதை யார்செய் வார்க்கூ றுநீயே


---ராஜ பழம் நீ (24-Sep-2017)

எழுதியவர் : பழனிராஜன் (24-Sep-17, 5:40 pm)
பார்வை : 140

மேலே