தமிழே

உனது பெருமையறியாமல் இழக்க துணிந்தோம்
இன்று உனது பெருமையறிந்து தேடுகிறோம்
பழம்பெரும் பண்பாட்டை மூடநம்பிக்கை என்று புறம் தள்ளி அந்நிய நாகரிகம் கண்டு வியந்தோம்
இன்று உன்னைத் தேடித்தேடி அலைகின்றோம்.
காலாச்சாரத்தை கட்டிக்காத்த கரிசல் காட்டு மக்களை மூடர்கள் என்றார்கள்.
உணர்ந்து பொதிந்து வைத்த அறிவியலை காணாமல் அயல் நாட்டு அறிவியல் கண்டு வியந்தோம்
அதுவும் நம் மூதாதையர் கண்ட அறிவியல் என்று அறியாமல்.
எம் முன்னோர் தந்த விருந்தோம்பலும் இன்சிரிப்பும் மனதில் பூட்டி வைத்தோம்.
கட்டிக்காத்த வீரமும் அறிவும் இன்றும் எங்கள் உதிரத்தில் உறங்கி கிடக்கிறது.
எத்தனை சதிகள் கொண்டு அழித்தாலும் குருதி பொங்கிட எழுந்து கூர் ஈட்டியாய் மாறி அம்பெய்தி அழித்திடுவோம் வென்றிடுவோம்.

எழுதியவர் : (24-Sep-17, 10:57 pm)
Tanglish : thamizhe
பார்வை : 186

மேலே