காதல் தேவதையின் தேடல்

காதல் தேவதையே காதல் தேவதையே...
என்னை ஏனடி கொள்கிறாய்..
கனவில் தினம் வந்து செல்கிறாய்..
இதழோர புன்னகை என்னை சாய்க்குதடி..
விழியோர தேடலில் கால்கள் ஓடுதடி...

தினம் சாலையோரம் நடக்கும் வேளையிலே
பலநூறு பெண்கள் கடக்கையிலே
நீ யாரோ நீ யாரோ என்று மனம் தேடுதடி
உன் இதழ் காண என் விழி ஏங்குதடி…

இவள் இல்லை அவள் இல்லை
இவள் இவள் இவள் இல்லை
அவள் அவள் அவள் இல்லை
எவள் தானோ நீ என்று கண்கள் தேடுதடி
உன்னை காண தானே என் இதயம் துடிக்குதடி………..
காதல் தேவதையே காதல் தேவதையே...

எழுதியவர் : ஷர்மிளா தேவி G (25-Sep-17, 8:30 pm)
பார்வை : 119

மேலே