வாழ்க்கை
வாழ்க்கை
=====================================ருத்ரா
வாழ்க்கை என் கூட
படுத்துக்கொள்கிறது.
புத்தகம் படிக்கிறது.
கம்பியூட்டரில் "கேம்ஸ்ல்"
விரல் சொடுக்குகிறது.
கைபேசியில் என் கைரேகைகள்
கல்வெட்டுகள் ஆனபோதும்
அதற்குள்ளும் கிசு கிசுக்கிறது.
என் அவள் "ஐ லவ் யு" சொல்லும்போதும்
அது தன் கழுதைக்காதுகளை
மொசு மொசு வென்று
எனக்கு முன்னாலே
நீட்டிக்கொள்கிறது.
ஒரு நாள் "குமிழியெல்லாம்"
உடைந்து போகிறது.
அப்போது
அந்த குரங்கு சரேலென்று
எங்கோ ஒரு கிளைக்கு தாவி
மறைந்து விடுகிறது.
என் கண்ணீரின் கொதிக்கலத்துள்
இப்போது நான் மட்டுமே!
====================================