என் கவிதை நீயடா

நினைத்து நினைத்து அழுகும்
சிறு குழந்தைப் போல ஆனேன்,
உன்னைப் பிரிய
நினைக்கச் சொன்னால்,
நான் இறந்தும் கூட போவேன்!!!

அலைந்து அலைந்து உன்னை
உலகம் முழுவதும் தேட,
அமைதியாக என் மனதினில்
பதிந்த ஆணும் நீயே!!!

உன் பேச்சு போதுமே..,
என் மூச்சினில்
உன்னைக் கலந்து
வாழ்வேன் நானே!!!

காயங்களும்;சோகங்களும் கூட
இனிமையானவை!
நீ என்னுடன் இருந்தால்....
நிறைவான இன்பமும் கூட
எனக்குத் துன்பம்,நீ
என்னருகினில் இல்லாவிட்டால்!!!

ஆயிரம் சோகங்கள்
என்னைத் தீண்டினாலும்,
உனக்கேதும் சிறுத்துன்பம்
தோன்றினால்..,
உன்னைப் பற்றி மட்டுமே
எண்ணத் தோன்றுகிறது.
ஏனெனில்,என்னை விட
உன்னை நேசிக்கிறேன்,
அதிகமாக!!!

ஒவ்வொரு நொடியும்,
எனது இதயம் துடிப்பது
என்னை வாழவைக்க அல்ல...,
உன்னை என் வாழ்வினில்
வரவழைக்க!!!

உன்னால் கிடைத்த
சின்னச்சின்ன ஆனந்தம் கூட,
பெரிய சொர்க்கம் போன்றது...
அதே நேரத்தில்,
சின்னஞ்சிறு வலிகள் கூட,
நரகம் போன்றது...
உன்னைப் பிரிந்திருந்தால்!!!

மொத்தத்தில்,
என் கவிதை நீயே....
ஏனெனில் கற்பனையில் மட்டுமே
உன்னை நேசிக்கின்றேன்!!!

எழுதியவர் : பானுமதி (26-Sep-17, 9:09 pm)
சேர்த்தது : மதி
பார்வை : 249

மேலே