புரியாத உறவுகள்

உயர்வாய் எண்ணி இருந்தேன் உனை பற்றி
மறைமுகம் கண்டேன் உடைந்து போனேன்...
இதுவரையில் நன்மை இல்லை உன்னால்
இருந்தும் விலக இயலவில்லை என்னால்...
நன்மைகளை மறந்தாய்
மனம் நோக வைத்தாய் - புரிதல்
வந்தது எனக்கும் – அன்பை
தேவை இன்றி கொடுக்காதே
தேவைக்கு மறுக்காதே...
உறவுகள் தொடர்கதை என்பது பழமொழி
உறவுகள் விடுகதை என்பது என் மொழி
அன்பை எதிர்பார்த்தேன்
அனுபவம் கிடைத்தது--- நன்றி....