கூட்டு குடும்பம்

அன்பான வார்த்தைகள்
அறிவுரையின் அச்சய பாத்திரம்
அக்கறையின் பிறப்பிடம்
ஒற்றுமையின் உறைவிடம்
ஒளிவில்லா உயர்வு வரும்...!

கலகலப்புகளும் உண்டு
சலசலப்புகளும் உண்டு
தினம் தினம் சந்தோஷம்
திடீரென வரும் கொண்டாட்டம்
என்றும் விலகாத உறவு...!

எதிரிக்கும் உதவும் குணமுண்டு
இளமையில் தெளிவு உண்டு
இனிமையான இயல்பு உண்டு
கவலைகள் காற்றில் பறக்கும்
கடவுளின் அருகில் இருப்போம்...!

லவ் க்கு கூட எதிர்ப்பு இல்லை
லாவகமாய் புரிய வைக்கும்
மனதோடு கனவு உண்டு
மறக்காத காயங்கள் இல்லை
நீயா நானா விவாதம் இல்லை
நினைக்க கூட நேரமில்லை...!

சுகமற்ற நேரம் தாங்கும் கரங்கள் உண்டு
சுமையை தனியே தாங்கும் நிலையும் இல்லை
உரையாடல் உறவாடி கிடக்கும்
உயர்வாய் வாழ உழைப்பும் இருக்கும்
விசேஷமும் விழாவாகும்
விழாவும் வியந்து போகும்...!

வகைவகையாய் உணவுகள் பரிமாற
குறும்பு தானங்கள் நிறைந்திருக்க
உணவும் அதிகமாய் செல்லும்
உடனே பாராட்டும் கிடைக்கும்...!

வாசனை மலர்கள் மலர
அன்பு கரங்கள் தொடுக்க
நீ இரு நான் பார்த்துகிறேன் -என்கிற
வசனம் இல்லம் எங்கும் ஒளித்திடும்...!

துன்பங்கள் தூரத்தில் நிற்க
இன்பங்கள் இணைந்தே இருக்க
யாரையும் மதிக்கும் குணம் இருக்கும்
யாவரும் மதிக்கும் குணமும் இருக்கும்
இத்தனையும் அளித்திடும் சொர்க்கம் – இதை
அறிந்தவர் இணைந்ததே இருப்பர்
அறியாதவர் விலகி இருப்பர்…!

இத்தனையும் அனுபவிப்பவர் கொடுத்து வைத்தவர்...!
வாழ்க வளமுடன்...!!!

எழுதியவர் : சுப்ரியா (27-Sep-17, 3:38 pm)
Tanglish : KOODDU kudumbam
பார்வை : 7368

புதிய படைப்புகள்

மேலே