கனவு காணுங்கள்

கனவு காணுங்கள்

அண்டத்தை அளவிடவே கனவு காண்போம்
-------- அழிவில்லா வாழ்விற்கே ஒன்று சேர்வோம் .
பண்டத்தைப் பகிர்ந்துண்ணப் பழகிக் கொள்வோம் .
-------- பாசத்தை நேசத்தை பண்பால் காட்டிக்
கண்டத்தைக் காற்றுடனே இணைத்துப் பார்த்துக்
-------- கண்டிடுவோம் கனவுதனை நதியும் ஒன்ற
பிண்டத்தைக் கரைக்கின்ற கடலும் சேரப்
-------- பிறர்க்காக உயிர்வாழ வேண்டு மன்றோ !!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Sep-17, 10:08 pm)
பார்வை : 146

மேலே