நம் நட்பு
எந்த கோவிலுக்கு போனாலும்
எனக்கான வேண்டுதல்
முதலில் உன் மனதில்....
எந்த ஊருக்குப் போனாலும்
பார்த்து பார்த்து
எனக்காக
நீ வாங்கி வரும்
பொது தேர்வு புத்தகங்கள்
என் அறிவுக்காக......
எந்த கண்காட்சிக்கு போனாலும்
எனக்காக
நீ வாங்கி வரும்
மூலிகை பொருட்கள்..
என் ஆரோக்கியத்திற்காக...
நீ வாங்கும் எந்த
புதுப் பொருளிலும்
எனக்கான முதல் பொருள்...
காதலனுக்காக காதலியோ,
கணவனுக்காக மனைவியோ,
எடுத்துக் கொள்ளாத அக்கறையை,
நட்பிற்காக
இந்த நண்பனுக்காக
நீ காட்டுவது
என் பூர்வ ஜென்ம புண்ணியமோ???
காலங்கள் மாறலாம்
உனக்கென-எனக்கென
ஓர் குடும்பம் அமைந்து
என்னில் இருந்து
உன்னை
நம் நட்பை பிரித்து
நாடு கூட கடத்தலாம்...
ஆனால் நட்பு சின்னம்
நம் சிந்தையை விட்டு
என்றுமே அழியாது...