மூவரை வணங்குவோம்
இனிய ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்...!
கலைகள் தந்திடும் கலைமகளே
கமலம் வெள்ளையில் உறைபவளே,
அலையில் துயில்வோன் துணையவளே
ஆதி லெட்சுமித் தாயவளே,
நிலைத்திடும் பொருளெலாம் அளிப்பவளே
நிறைந்த செல்வம் தருபவளே,
மலைமகள் வீரம் தருபவளே
மூவரை ஒன்றாய் வணங்குவோமே...!