யார் யார் யாரோ யாரோ

யாருக்கும் தெரியாமல் என் இதயம்
துடிப்போடு சேர்ந்து உன்னைப்பற்றிய நினைவோடு
சிறப்பாகத்தான் இயங்கி கொண்டிருக்கிறது !

யாரேனும் வந்து என்ன ஏதோ ? ஒரு சிந்தனை ?
என்று கேட்கும் தருணத்தில் உன்னைப்பற்றித்தான்
என்று உன் பெயரை உச்சரிக்க ஆவலாய் தோன்றுகிறது !

யாரை பார்த்து பேசிக்கொண்டிருந்தாலும்
உன் அழகின் பெருமிதம் பற்றியும் ! நீ என்மேல் கொண்ட
அன்பின் பெருமிதம் பற்றியும் அளாவி விட ஆசையோடுதான்
நா குளறுகிறது !

யார் யாரோ காதல் பற்றியும் ! காதலின் நினைவு பற்றியும்
காதலின் வலி பற்றியும் என்னிடம் கேள்விகளை கேக்கும் தருணத்தில்
நானும் காதலில் உன்னால் விழுந்தும் வீழ்ந்தும் கிடப்பதை
மகிழ்வாய் ஒன்றிரண்டு வார்த்தைகளை சொல்லிட தோன்றுகிறது !

யார் எழுதிய கவிதை இது ? என்று உங்களுக்கு தெரியுமா
என்று என்னிடம் ஒரு சிலர் கேட்கும்பொழுது
உன்னைப்பற்றி எழுதிய மொத்தக்கவிதையும் அக்கணமே
அவர்களிடம் வாசித்துக்காட்ட உள்ளம் உருகுகிறது !


யார் இந்த பெண் ? இவ்வளவு அழகா ! என்று யார் யாரோ
உன்னைப்பார்த்து ஆச்சரியப்பட்டு ரசிக்கும் நேரத்தில்
அவள் என் காதல் இளவரசி ! அவள் என் கவிதை நாயகி !
அவளே அவளே ! எல்லாமுமாய் எனக்கானவள் என்னவள்
என்று உண்மையெல்லாம் சொல்லிட வேண்டும் என
உள்ளம் தான் சற்றே தடுமாறுகிறது !

யார்மீதேனும் காதல் வயப்பட்டு உள்ளீர்களோ என்றவரிடம்
அதோ அந்த "பேரழகி " என்று உன்னை சுட்டிக்காட்ட
ஆள்காட்டி விரல் சட்டென அவசரப்படுகிறது !


யாருப்பா அந்த பொண்ணு சும்மா சொல்லு என்று
யார்கேக்கும்போதும் அவளைப்பற்றி சொல்லவும்
அவள் அழகை பற்றி எழுதவும் வார்த்தை பற்றாக்குறை
இருப்பதை மறந்திடாமல் சொல்ல தோன்றுகிறது !

யார் யாரோ காதல் பற்றியும் ! கவிதை பற்றியும்
என்னிடம் பேசினால் !

அட போங்கப்பா ! காதல் ,கவிதை ,கருப்பட்டி ,மண்ணாங்கட்டி
வேலைய பாருங்கப்பா ! இதெல்லாம் தேவை இல்லாத வேலை !
கிளம்பு கிளம்பு என்று சொல்லிவிட்டு !


மனதிற்குள் வெட்கமும் மகிழ்ச்சியும் கலந்த
ஏதோ ஒரு அழகான உணர்வோடு உள்ளுக்குள்ளே
எனக்கு நானே சிரித்துக்கொண்டே அவ்விடத்தை விட்டு
நகர்ந்து விடுகிறேன் !

எழுதியவர் : முபா (1-Oct-17, 12:21 pm)
பார்வை : 313

மேலே