சொல்லப்படாத என் காதல்
உன்னை பார்த்த முதல் நாள்
மறக்க முடியுமா என்னால்?
உன்னில் என்னை தொலைத்த
நாள் அல்லவா?
உன் கண்களால் கவர்ந்திழுத்தாய்!
உன் பார்வையால் பைத்தியமாக்கினாய்!
உன் அரவணைப்பால் திணறச்செய்தாய்!
மொத்தத்தில் என்னை ஏதோ செய்தாய்.............
உன் பார்வைக்காக தவம் கிடந்தேன்
நீ பார்க்காதபோது பார்த்துக்கொண்டேன் பலமுறை உன்னை
நீ பார்க்கும் போது பார்க்காதது போல் பாவனை செய்தேன்
நீ என்னை பார்க்கிறாயா என்பதை அறிய.......!
பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரிந்தோம் பைக்கில்
பாரபட்சம் பார்த்ததில்லை
நம் அன்பில்.......!
எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்
உன் வருகைக்காக......
யதார்த்தமாக சந்திப்பதைபோல்
நீ அறிய........!
எதிர்பாராத உன் தீண்டல்கள்
களவாடியது என் பெண்மையை....
உன்னிடம் பிடித்ததோ உன்
மென்மை தான்.........!
தைரியமாக கூறினாய் உன் தாயிடம்
இவள் என் தோழி என்று.....
தைரியம் வரவில்லை எனக்கு
உன்னிடம் என் காதலை கூற..........!
விளையாட்டாய் நீ பழகியது
விபரீதமானதோ என் வாழ்வில்
காதலாக...?
நான் அழகானவள் அல்ல
தெரியும் எனக்கு.......
நான் அன்பானவள் என்று
புரியும் உனக்கு......
அதனால்தான் நம்பினேன் உன்னை
நீ காதலிப்பாய் என்று.......
அதனால்தானோ நிற்கிறேன்
அனாதையாக இன்று.....!
உன் கண்களால் கவரத்தெரிந்த
உனக்கு தெரிவதில்லையா?
உன்னால் என்கண்கள் படும்பாடு....!
கனவுகளும் கலைந்தது
காலங்களும் கரைந்தோடியது
என் கல்யாணக் கனவுகளும்
நிறைவேறியது
உனக்கு வேறொரு பெண்ணோடு.....!
உடலும் நடுங்குகிறது
மனமும் கருகியது
நம் பிரிவை எண்ணி........!
காலங்கள் கரைந்தாலும் நம்புகிறேன்
உன்னை காதலிக்கும் இயந்திரம்
நான் என்று!
ஊற்றைப் போல ஊறுகிறது
என் அன்பு இன்றும்.....!
இது என்ன ஒரு வழிப்பாதையா?
நான் மட்டும் பயணிக்க
இருந்தும் பயணிக்கிறேன்
எதிரில் நீ வருவாய் என்ற நம்பிக்கையில்.........!
ஒரு நாள் அழைத்தாய்
நலமா என்றாய்?
அன்றுதான் நான் நலம் என்று
அறியபோவதில்லை நீ........
ஏன் தனிமையில் வாடுகிறாய் என்றாய்
உன் நினைவுகளில் வாழ்வதை
அறியவில்லை நீ.......
எல்லோரும் கூறினார்கள் என்னை
ஒரு தலையாக காதலித்தேன் என்று...
நான் ஒரு தலையாகவா காதலித்தேன்
உயிராக அல்லவா காதலித்தேன்.....!
சொல்லப்படாத என் காதல்
சொல்லாமல் சொல்லிவிடும் உனக்கு
கையில் தடியோடு
தலையில் நரையோடு
முதிர்கன்னியாய்
என்னை நீ காணும் போது.........