காதல்- ஒரு கிறுக்கல்

தமிழுக்கு அழகு' ழ' கரம்
உனக்கும அழகு தருவதும்
ஓர் 'ழ' கரம்தான் ,அதுவே
உந்தன் அழகிய பவழச் செவ்வாய்

கவிதைக்கு அழகு 'எதுகை', 'மோனை'
கண்ணே உனக்கு அழகு தருவதோ
உந்தன் கார்மேகக் கூந்தலும்
செக்க சிவந்த தாமரை முகமும்
'ம' விற்கு அழகு அதன்மேல்
ஓர் புள்ளி ஏந்தி 'ம்' என்று மாறும் போது
'அம்மா' வென்று/ அதுகொண்டு நாம் அழைக்கும்போது
பெண்ணே உன் முகத்திற்கு அழகு
உந்தன் நெற்றி மீது நீ ஏற்கும்
அழகிய திலகம்
ஆயுத எழுத்து தமிழ் மொழிக்கே
ஓர் ரக்ஷை ஆகியதோ அதுபோல்
உனக்கு நீயே வடித்த' ஆயுத'மே
எழில் பொங்கும் உன் வடிவத்தை
வெண்பட்டு சிற்றாடைக் கொண்டு
நீ மறைத்த உன் கைவண்ணம்

இப்படியே இன்னும் உன் அழகை
கவிதைகளாய் வடிக்க எனக்கோர் ஆசை
நீ எந்தன் கண் முன்னே வந்து வந்து
போகும்போதெல்லாம்

இன்னும் எழுதிட காத்திருப்பேன் உனக்காக
நீ என் முன்னே வந்து நிற்கும் போதேல்லாம்
என்னவளாய் என் காதலியாய்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Oct-17, 1:41 pm)
பார்வை : 96

மேலே