விலகிச் செல்லும் நீ

நான் உன்னை படிக்க
நினைத்த போது
உன் எழுத்துக்களெல்லாம்
கவிதைகளாக மாறி
குதித்து என்னிலிருந்து
ஓடத் தொடங்குகின்றன...
உன் கண்ணாமூச்சியில்
தோற்றுப்போகிறேன் நான் !

நான் உன்னை குடிக்க
நினைக்கின்ற போது
உன் துளிகளெல்லாம்
அருவிநீராய் மாறி
பாய்ந்து என்னிலிருந்து
ஓடத்தொடங்குகின்றன ...
உன் தொடரோட்டத்தில்
மூச்சி வாங்கி
ஓய்ந்துபோகிறேன் நான் !

நான் உன்னை தொட்டுவிட
நினைக்கின்ற போது
உன் பெண்மேனியெல்லாம்
பட்டாம்பூச்சியாய் மாறி
பரகத்திக்கு என்னைவிட்டு
பறக்கத்தொடங்குகின்றன ...
உன் உயரத்தை
எட்ட முடியாமல்
ஏக்கத்தில் நான் !

நான் உன்னை எட்டிவிட
நினைக்கின்ற போது
உன் புன்னகையெல்லாம்
வெண்முத்துக்களாய் மாறி
ஆழ்கடலுக்குல் என்னைவிட்டு
அமிழத் தொடங்குகின்றன ...
உன் ஆழங்களுக்குள்
அடைக்கலம் தேடும்
அகதியாய் நான் !

நான் உன்னை எட்டிவிட
நினைக்கின்ற போது
உன் புன்னகையெல்லாம்
வெண்முத்துக்களாய் மாறி
ஆழ்கடலுக்குல் என்னைவிட்டு
அமிழத் தொடங்குகின்றன ...
உன் ஆழங்களுக்குள்
அடைக்கலம் தேடும்
அகதியாய் நான் !

நான் உன்னை வருடிவிட
நினைக்கின்ற போது
உன் கூந்தலெல்லாம்
கருப்புதுகளாய் மாறி
இருளுக்குள்போய் என்னைவிட்டு
ஒளியத் தொடங்குகின்றன ...
உன் கருப்புக்குள்ளும்
கருவறை தேடும்
குழந்தையாய் நான் !

நான் உன்னை சீண்ட
நினைக்கும் போது
உன் சிணுங்களெல்லாம்
ஸ்வரங்களையாய் மாறி
கோவில்மணியோசையை சேர்கின்றன..
உன் தரிசனத்துக்கு
காத்திருக்கும் ஒரு
பகுத்தனாய் நான் !

நான் உன்னை கட்டிக்கொள்ள
நினைக்கின்ற போது
உன் நாணமெல்லாம்
விலங்காய் மாற்றி
வேலியிட்டு என்னைவிட்டு
வெகு தூரமாகின்றாய் ...
உன் வலிதரும் விலகலின்
விளங்காத புதிரின்
விடைதேடியவாறு நான் !

நான் உன்னை
என்னவளாகிக்கொள்ள
நினைக்கின்ற போது
உன் பெண்மையெல்லாம்
செம்பூக்களாக மாற்றி
கொடியென ஓட்டவேண்டிய
செடி என்னைவிட்டு
உதிரத் தொடங்குகின்றாய் ...
உன் வாசனை
விட்டுப்போன மிச்சங்களை
சுவாசித்தபடி நான் !

நான் உன்னை
மணவாட்டியக்கிக கொள்ள
நினைக்கின்ற போது
உன் மாயவிழிகளை
மந்திரசிறகுகளாய் மாற்றி
தேவதையாகி என்னைவிட்டு
தூரம் செல்கிறாய் ...
உன் விழிப்பார்வைகள்
எனக்குள் வீசிச்சென்ற
சாபங்களில் இருந்தும்
உன் விழிப்பார்வையிலிருந்து
எனக்குள் விழுந்த
வரங்களிலிருந்தும்
விடுபட முடியாமல் நான் !

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (1-Oct-17, 2:35 pm)
Tanglish : vilagich sellum nee
பார்வை : 303

மேலே