இறைவன்

எங்கும் நிறைந்தவன் எதிலும் இருப்பவன்
அதனாலன்றோ 'அவன்' இறைவன்
'அவனை' இல்லை என்பாரும் , கூறும்போது
'இறைவன் என்பான் இல்லையே' என்பர்
அப்படி இல்லை என்று கூறும்போதும்
தம்மை அறியாமல் 'அவன்' பெயரை கூறுவார்
அவன் 'மாயன்' அல்லவா , அதனால் தான்
'இருப்பான்', 'இல்லாமலும்' இருப்பான் அவனே
இறைவன் , அவன் பேசும் மொழி 'மறை'
அதுவும் ஒலி அலைகளில் 'மறைந்தே'
இருந்து ஒலிக்கும், ஞானிகள் அதன்
பொருள் அறிந்து நமக்கு விளக்கம் தருவார்
இப்படி அறிந்தவர்க்கு 'எளியோன்', அறியார்க்கு
என்றும் புலப்படாதவன், அவனே 'இறைவன்'.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Oct-17, 4:20 pm)
Tanglish : iraivan
பார்வை : 197

மேலே